ஞாயிறு, 18 அக்டோபர், 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) Othimalai Devine Secrets and its Devine Journey ஒரு பார்வை (கண்ணோட்டம் மெய்யன்பர்களின் அருள் பார்வைக்கு

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்)
Othimalai Devine Secrets and its Devine Journey
ஒரு பார்வை (கண்ணோட்டம்
மெய்யன்பர்களின் அருள் பார்வைக்கு
முதல் பகுதியில் இதுவரை நாம் கதை போன்று,
உயிர்நிலையாகிய (ஜீவாத்மா) நம் மூன்று நிலைகளை அதாவது பொது நிலை (சகலர்), அடங்கு நிலை (பிரளயாகலர்), அறிவியல் நிலை (விஞ்ஞானகலர்) என்று மூன்று நிலைகளையும் அதற்கு ஏற்றவாறு அந்நிலைக்கு ஏற்ப இறைவன் அந்த பரம்பொருள் வந்து
விறகில் தீயினர் போன்று பொது நிலைக்கும் (சகலர்),
பாலில் படு நெய் போல் அடங்கு நிலைக்கும் (பிரளயாகலர்),
மணிக்குள் ஒளிபோல் அறிவியல் நிலைக்கும் (விஞ்ஞானகலர்)
அருள்பாலிக்கிறார் என்று பார்த்தோம்.
இனி இரண்டாம் பகுதியில் உண்மைநிலை உணர நாம் எப்படியெல்லாம் இருக்கிறோம் என்று தெளிந்து கொண்டு மூன்றாம் பகுதியில் மாலும், நான்முகனும் தேடி தேடொணா தேவனை தம்முள்ளே தேடும் வழியையும், கமுக்கங்களையும் (இரகசியம்) உறவு கொள் நட்டு, உணர்வு கயிற்றால் உருக வாங்கி கடையும் வழிகளையும் விளக்கமாக பார்த்து கதி ஒன்றையும் காண்கின்றிலேன் என்ற நிலை மாறி உண்மை கதியை ஒதிமளையான் அருளால் பெற்று படியேருவோம் படிப்படியாக அவனை அடியவே!
****
Vetri Velமெய் பொருள் காண்பது அறிவுMohanraj Muruganandam மற்றும் வேறு 5 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
கருத்துக்கள்
ஓதியடிமை
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
இதுவரை ஒதிமலைhttps://www.facebook.com/groups/othimalaikamukkam/ பயணத்தில் இணையத்தவர்கள் விரும்பினால் இணைந்து கொள்ளவும். முதல் நிலை பதிவு முடிந்து அடுத்த ஞானநிலைப்பதிவு துவங்க உள்ளதால் உடனே இணையவும் அப்பொழுதுதான் உரிய பதில் விளக்கப்படும் - விருப்பம் அல்லது பதில் எழுதாத அன்பர்கள் நீக்கபடுவார்கள் என்பது வேண்டுகோள் அய்யனே

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (௰௭ ) Othimalai Devine Secrets and its Devine Journey (17)

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (௰௭ )
Othimalai Devine Secrets and its Devine Journey (17)
தீர்த்தமலை மிகவும் அற்புதமான மலை, மலையின் ஒருபகுதி எப்பொழுதும் பசுமையாகவே உள்ளது. இத்தளம் 12 சோதிலிங்கங்கலுக்கு இணையான இரமேசுரதிற்கு ஒப்பான ஒன்றாகும். அங்கு செல்லமுடியாதவர்கள் தீர்த்தமலை ஈசனை தரிசித்து அருள்பெறலாம். மலை மீது ஒரு கோயிலும் மலையின் கீழ் ஒரு கோயிலும் உள்ளது. நன்பகல் பூசை மலை மீது உள்ள கோயிலிலும், மலையில் அடிவாரத்தில் உள்ள கோயிலில் மாலை நேரத்திலும் நடைபெறுகிறது. இராமபிரான் இத்தளத்தில் சிவபெருமானை வழிபடும்போது கங்கை நீர் கொண்டுவர அனுமன் தாமதித்ததால் மலைமீது ஓர் அம்பு எய்தி நீர் வரவைத்து பூசை செய்து முடித்ததாக வரலாறு. இதுவே இராமதீர்தம் என்று அழைக்கப்படுகிறது.இது நடு மலையில் 20 அடி தொலைவிலிருந்து எப்பொழுதும் வந்துகொண்டிருக்கிறது. அருகருகே மூன்று இடங்களிலிருந்து நீர் வந்துகொண்டிருக்கிறது, இது அகத்தியர் தீர்த்தம், சீதா தீர்த்தம், குமார தீர்த்தம் என்றும் அழைக்கபடுகிறது. காலம் தாழ்ந்து வந்த அனுமன் பூசை முடிந்து விட்டதால் கொண்டுவந்த நீரை கோபத்துடன் தூக்கி வீசினார் அதுவே 10 கி .மீ. தொலைவில் அனுமன் தீர்த்தமாக விளங்குகிறது. தீர்த்தமலை கோயிலில் எப்பொழுதும் நீர் வந்துகொண்டிருக்கிறது ஆனால் அடிவாரத்தில் இல்லை. இராமேசுவரத்தை போல கோயில் எப்போதும் திறந்திருக்கும் கருவறையை தவிர்த்து. பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் திறந்தவெளியில் படுக்கின்றார்கள், தங்கள் குறைகளுடன் இரவு தங்கினால் குறைகள் தீர்க்கப்படுகிறது என்ற நம்பிக்கையில். முதல்முறையாக நாங்கள் சென்ற போது இரவு பத்து மணி ஆகிவிட்டது. பக்தர்கள் இரவிலும் குளித்துக்கொண்டே இருந்தார்கள், காலையில் கோயிலுக்கு மேல் உள்ள குகையில் ஒரு சாமியார் இருப்பதை அறிந்து அவரை பார்க்கச் சென்றோம். அப்பொழுது கோவணம் கட்டிக்கொண்டு அருகில் ஒரு பாம்புடன் படுத்திருந்தார். எங்களுக்கு சற்று அச்சமாக இருந்தது. அவர் எங்களை பார்த்து எழந்தவுடன் அங்கு பாம்பு காணப்படவில்லை மறைந்துவிட்டது . அவர் படுத்திருந்த இடம் ஒருவர் மட்டுமே படுக்கும் அலுவுக்கே இருந்தது, மழைநீர் மலையிலிருந்து வேகமாக வரும்போது பரன்போன்ற அமைப்பில் இருந்துகொல்வாராம். அங்கு அமைந்துள்ள விசாலாட்சி அம்மையில் கோயிலை பராமரித்துவரும் அம்மையார் ஒருவர் எங்களுக்கு இனிய அமுது செய்து பசியாற்றினார். அந்த அம்மையில் விருந்துணர்வில் களித்த நாங்கள் எங்களுடன் ஒதிமலைக்கு அழைத்துச்சென்று அய்யன் ஓதியப்பனை தரிசிக்க செய்தோம்(நன்றியாக) .
தீர்த்தமலை மேல் செல்ல அந்த அம்மையாரிடம் விவரம் கேட்டதற்கு அந்த சாமியாரின் இசைவு முக்கியம் என்றும் விடியற்காலையிலேயே புறப்படவேண்டும் என்றும் கூறிவிட்டார், சாமியாரிடம் மெதுவாக மேலே செல்ல அனுமதி கேட்டோம், அன்று செல்ல முடியாது என்றும் மேலும் விவிரம் கேட்டதற்கு அங்கு பாம்பாட்டி சித்தரின் குகை உள்ளது என்றும் உள்ளே செல்ல வாயிலில் ஒவ்வொருவரும் படுத்தவாறே செல்லமுடியும் என்றும் உள்ளே சென்றால் 5 அல்லது 6 பேர் அமர்ந்து தியானம் செய்து சித்தரை உணரமுடியும் என்றார். சித்தர் உள்ளே இருந்தால் மலை வண்டுகளும், மலை தேனீக்களும் குகை வாயிலை மூடிக்கொள்ளுமாம்.
அவர் கூறியதிலிருந்து மலைக்கு மேல் நிறைய சித்தர்கள் இருப்பதாக தெரிந்தது. அந்த இடம் எப்போதும் மிகவும் பசுமையாக இருக்குமாம், ஒருவர்பின் ஒருவராக உட்கார்ந்துதான் அவரிடம் பேசமுடிந்தது. வரும்போது ஒவ்வொருவர் தலையிலும் கைவைத்து ஒரு 'கதி' எடுத்து அருளூட்டி அனுப்பினார். திருவண்ணாமலைக்கு மிக அருகாமையில் இருப்பதால் அன்பர்கள் தீர்த்தமலை சென்று ஈசனின் அருளும் சித்தர்களின் ஆசியும் பெறலாம்.
இதுவரை ஓதிமலை பயணம் படித்துவந்த அன்பர்களுக்கு நன்றிகலந்த வணக்கங்கள். உண்மை நிகழ்வுகளை கதைவழி உணர்ந்த நிலை மாற, ஊனும் உயிராய் இருந்து ஓசையுடன் வாழுவு தரும் ஐயனை, உள்ளும் புறமும் நீக்கமுற அகண்டு பரவிய ஆனந்த சோதியை அவன் அருளால் உணர முயல்வோம். அவன் அருளால் ...இசைவு உள்ளவர்களுடன் ஓதிமலை பயணம் தொடரும் ....

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௬ ) Othimalai Devine Secrets and its Devine Journey (16)

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௬ )
Othimalai Devine Secrets and its Devine Journey (16)
"கீரை " என்று கேட்ட அந்த முனிவர் சமாதி உள்ள அந்த இடத்தில் புற்று எழுந்து காடாக மாறிய நிலையை பார்த்தோம். இப்போது அந்த இடத்தை ஆட்சி செய்த மன்னன் வேட்டையாடிய நிலையில் அப்பகுதிக்கு வந்த அரசன், தான் வந்த குதிரை அந்த புற்றின்முன் நின்றது, மேலே போக மறுத்ததை பார்த்த அரசன் அந்த புற்றை அகற்ற சொன்னார். என்ன வியப்பு ! சமாதியில் இருந்த அந்த முனிவர் தவம் கலைந்து "கீரை " என்றார்.
அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு அந்த முனிவர் கூறினார் .. நீயும் உன் மனைவியும் எனக்கு உணவு கொடுத்தீர்கள் நான் கீரை கேட்டுவிட்டு மீண்டும் சமாதியில் போய்விட்டேன், நீயும் உன் மனைவியும் இப்பொழுது அரசனும் அரசியுமாக இந்த பிறவியில் பிறந்துள்ளீர்கள் என்று கூறினார். ஓர் உண்மையான துறவிக்கு உணவளித்தவர்கள் அரசனும் அரசியும் ஆனார்கள் என்று வாரியார் கூறினார். இதைபோன்ற ஒரு உண்மை நிகழ்வுதான் நாம் இப்போது பார்க்கவிருப்பது.
நன்னிலம் என்ற ஊரில் பூந்தோட்டம் என்ற கிராமத்தில் சரசுவதி கோயில் உள்ளது நம் அணைவருக்கும் தெரிந்திருக்கும், தற்போது சிறப்பாக வளர்ந்து ஓர் ஊராக மாறியுள்ளது, கோயிலுக்கு செல்லுமுன் பாலம் உள்ள ஒரு வாய்கால் உள்ளதாள் போக்குவரத்தும் அதிகமான சாலையாக உள்ளது. அதன்வழியாக உள்ளே சென்றால் செடிகளும் மரங்களுமாக வயல்கள் நிறைந்த மிகவும் தனிமையான அந்த பகுதியில் ஒளிமயமான இடத்தில் உள்ள குடிசையின் முன் நடுத்தர வயதுள்ள ஒரு பெண்மணி இருந்தார். மண் அடுப்பில் தனக்காக ஏதோ உணவு தயாரிக்க முனைந்து கொண்டிருந்தார். மூன்று சித்த பெருமக்கள் அப்பெண்மணியின் அருகில் வந்து நின்று எங்களுக்கும் உணவு கிடைக்குமா என்றார்கள். அந்த பெண்மணியும் இருப்பதை பகிர்ந்து அனைவருக்கும் உணவு அளித்தார். "கருவாட்டு குழம்பு" ஆக்கி போட்டேன் என்றார் எங்களிடம் . நாங்கள் பார்க்க சென்ற பொது வயல்களுக்கு நடுவில் உள்ள வரப்பு என்பார்களே அங்கு எவருமே இல்லாத இடத்தில் ஆசை, பாசம், வெட்கம், உறவு, உடை அனைத்தையும் துறந்து நிர்வாண நிலையில் அமர்ந்திருந்தார், நன்றாக பேசினார், நதி மூலம் ரிசி மூலம் கேட்க கூடாது என்றதால் நாங்கள் எதையும் அம்மணியிடம் கேட்கவில்லை. முதலில் தவறாக புரிந்துகொண்ட அவ்வூர்மக்கள் அவரை அடிப்பதும், தாக்குவதும், புடவை கொடுத்தும் பார்த்திருக்கிறார்கள், பிறகு காலம் செல்ல செல்ல அந்த பெண்மணி துறவி என்பதை உணர்ந்து தங்களின் குறைகளை கூறி ஆசி பெற்று செல்கிறார்கள். நாங்கள் எப்போது சென்றாலும் எங்களிடம் நன்றாகவே பேசுவார்கள். இந்த நிலைக்கு எப்படி வந்தீர்கள் என்று கேட்டபோது:- மூன்று சாமி வந்தாங்க சாப்பாடு கேட்டாங்க நாங்கள் தீர்தமலையிலிருந்து வந்திருக்கிறோம் என்றார்கள் அவர்களுக்கு "கருவாட்டு குழம்பு" ஆக்கி போட்டேன் என்றார். உண்மையில் ஆடையேதும் அணியாத அந்த அம்மைக்கு நீண்ட சடைமுடி மட்டுமே ஆடையாக இருந்தது அய்யனின் அன்பு நிலை தானே இன்றும் நம்மிடையே உள்ளார். இவரைப்பற்றிய விவிரங்கள் வலைத்தளத்தில் பகிர இயலாததால் விரும்புவோர் சென்று ஆசி பெறலாம். நம்மிடையில் வாழும் உண்மை துறவி. தீர்த்தமலை பல சிறப்புகள் மிகுந்த அருள்மலை. தங்களின் பெயர் என்ன என்று கேட்டதற்கு "சின்னகுஞ்சு" என்று கூறினார் .. பயணம் பயணிக்கும் ...
Radhakrishnan RavAathiguru GuruNagarajan Krishnamurthyமற்றும் வேறு 4 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
கருத்துக்கள்
Nagarajan Krishnamurthy mihavum nandraha ulladhu siva..nandri ....annamalai

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰ரு ) Othimalai Devine Secrets and its Devine Journey (15) தீர்த்தமலை சித்தர்கள்

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰ரு )
Othimalai Devine Secrets and its Devine Journey (15)
தீர்த்தமலை சித்தர்கள்
சித்தர்கள் நம்மை மேல்நிலைக்கு கொண்டுசெல்வார்கள், நமக்கு வேண்டியதை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் மிக அதிகமான அன்பர்கள் சித்தர்கள் தவம் செய்த மலைகள், உலவும் மலைகள், சீவ ஒடுக்கம் போன்ற இடங்களுக்கு செல்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.
சித்தர்களின் பார்வை, அவர்கள் காற்று நம்மேல் படாதா என்ற நம்பிக்கை, ஆம் உண்மைதான் பலர் இதனை உணர்ந்திருக்கிறார்கள், இதனாலேதான் மலைகளிலும் கோவில்களைப்போல் மக்கள் கூட்டம் நிறைகிறது.
ஐயன் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் கூறிய செய்தியாவது .. தீர்த்தமலை சித்தர்களை பார்க்குமுன் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டியது இது . சில மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார்கள், வலை வீசினார்கள் அப்பொழுது மீனுக்கு பதில் கடல் அடியில் சீவ ஒடுக்கத்தில் இருந்த ஒரு சித்தமுனிவர் அகப்பட்டுகொண்டார். மிகக்கடுமையாக முயன்று படகில் ஏற்றினார்கள். என்ன செய்வது என்று புரியாமல் கரைக்கு கொண்டுவந்த அவர்கள் அவரது உடல் மீது இருந்த கிளிஞ்சல், சிப்பி முதலான அனைத்தையும் நீக்கி தூய்மை படுத்தினார்கள். உடலை தூய்மை செய்த நான்கு மீனவர்களும் தம் மனைக்கு செல்லாமல், தவசியின் அருகிலேயே அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்களாம், வீட்டிற்கு செல்லாததால் மனையின் மக்களும் செய்வதறியாது திகைத்துபோயினர். கூடியிருந்த வூர் மக்களில் ஒருவர் பக்கத்துக்கு ஊரில் ஒரு துறவி இருப்பதாகவும் அவரிடம் வழி பிறக்கலாம் என்று கூற அனைவரும் அந்த துறவியிடம் கூறி முறையிட்டனர்.. அத்துறவி சற்று யோசித்து சொன்னார் யாரவது தவறான வழிகளில் சம்பாதித்து சொத்து சேர்த்தவர்களின் வீட்டிலிருந்து சிறிது சோறு (உணவு ) கொண்டுவந்து அந்த நான்கு மீனவர்களின் வாயில் போடவும் அப்படி செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றார். அவர்களும் அப்படியே செய்ய அந்த நால்வரும் பழைய நிலை திரும்பி வீடு சென்றார்களாம் .என்று வாரியார் கூறினார். இதிலிருந்து சித்த மகான்களின் வலிமையும், தம்மை மேல்நிலைக்கு கொண்டு செல்வதும் தெறிகிறது. நாம் அதை பயன்படுத்தி சிறப்படையவேண்டும். வாரியார் கூறிய மற்றொன்று மலைக் காடுகளில் தவம் செய்துகொண்டிருந்த முனிவர்களும் தம் தவம் கலைந்து அருகிலிருந்த கிராமத்தின் அருகிலிருந்த ஓட்டு வீட்டின் அருகில்வந்து நின்று கைநீட்டி உணவு கேட்டார், வீட்டிலிருந்த பெண்மணியும் அவர் கணவரும் வந்து உணவு கொடுத்தார்கள், சிறிது கீரையும் பரிமாறினார்கள். முனிவர் கீரை உணவு உண்டு முடிந்ததும் "கீரை " என்று கேட்டார், பெண்மணியும் கீரை கொண்டுவர உள்ளே சென்றார். இந்த நிலையில் முனிவர் சமாதி நிலையை அடைந்தார், நாட்களும், மாதங்களும் , ஆண்டுகளும் கடந்தது முனிவர் இருந்த இடத்தில் ஒரு புற்றே அமைந்துவிட்டதது, அந்த இடமும் ஒரு காடாக மாறிவிட்டது. முனிவரின் நிலை என்ன ஆனது அடுத்த பதிவில் காண்போம் .....அருள்பயணதில் உடன் பயணிக்கும் அணைத்து அன்பர்களுக்கும் மிக்க நன்றி...
Nerkunam Radhakrishnan VenkatesanRadhakrishnan RavKumar Esan மற்றும் வேறு 6 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
கருத்துக்கள்
Muthu Suresh ஓம் சிவ சிவா
ஒதிமலை பயணக்கட்டுரை சிறப்பு

புதன், 13 மே, 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௪) Othimalai Devine Secrets and its Devine Journey (14)


ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௪)
Othimalai Devine Secrets and its Devine Journey (14)

தொலைபேசிக்கு அருகில் இருந்த சேலம் ஐயன் தொலைபேசியை எடுத்து பேசினார்.  ஐயனை சூழ்ந்துள்ள குண்டர்கள் கேட்க  "அய்யா" என்றார்.  மறு பக்கத்திலிருந்து ஒரு குரல் "ஐயனே எப்படி இருக்கிறீங்க", என்றது.  அய்யனோ யாரப்பா நீ என்றார்.  நான் தான் அய்யா வேலாயுதன், கடந்த வாரம் தங்களிடம் வந்து ஒரு குறையை தெரிவித்தேன்.  இப்பொழுது அது சரியாகிவிட்டது அய்யனே, நன்றி சொல்லவே அழைத்தேன் எப்படி இருக்குறீங்க அய்யனே என்றார் மீண்டும்.

அய்யன் சொன்னார் என்னை சுற்றி 5 அடியாட்கள் கையில் தடியுடன் சூழ்ந்து கொண்டு நிற்கிறார்கள், இன்னும் 3 மணியில் என் உயிர் போகப்போகிறது என்றார்.  மருமுனையிலுள்ள வேலாயுதம் என்ன அய்யா என்ன சொல்கிறீர்கள் விவரமாக சொல்லுங்க அய்யா என்றார்.  ஐயனும் அந்த செல்வந்தர் கூறி மிரட்டியதை அப்படியே சொன்னார் .    மூன்று மணியில் என்னை 300 மைலுக்கு அப்பால் உள்ள மலைபக்கதில் கொண்டுபோய் வெட்டி புதைக்கப்போவதாக அந்த செல்வந்தன் கூறியிருக்கிறான் என்றார்.  எதிர் முனையிலிருந்து  குரல் "அஞ்சாதீங்க அய்யனே"  அவர் வந்தவுடன் இன்னும் ஒருமணியில் தங்களுக்கு சொன்னது அந்த செல்வந்தனுக்கு நடக்கும் என்று சொல்லுங்கள் என்றார்.

சேலம் ஐயன் தொலைபேசியை வைத்ததும் சூழ்ந்திருந்த தடியர்களில் ஒருவன் தமிழன், என்ன அய்யா யார் தொலைபேசியில் என்றான், ..ஏதோ வேலையுதனாம் என்று விவரத்தை சொன்னவுடன்  "இன்னும் ஒருமணியில் அந்த செல்வந்தனுக்கு இதே நிலைமை நடக்கும் என்று சொன்னாம்ப்பா" என்றார்.  உடனே அந்த குண்டன் மற்றவர்களிடம் ஏதோ மொழியில் பேசினார்.  எல்லோரும் தடிகளை அங்கேயே விட்டுவிட்டு ஓடதுவங்கினார்கள்.   மடியில் உப்பரிகையில் இருந்த அந்த செல்வந்தர் அவர்கள் ஓட்டம்பிடிப்பதை பார்த்து கீழே இறங்கிவந்து அய்யனிடம் "ஏய் சாமி " என்ன மந்திரம் போட்டாய்,  அவர்கள் ஏன் இப்படி பயந்து ஓடுகிறார்கள்?. என்று மிரட்டி கேட்க ஐயனும் தொலைபேசியில் ஏதோ வேலாயுதம் என்பவன் பேசினார்.  இன்னும் ஒருமணியில்  300 மைலுக்கு அப்பால் உள்ள மலைபக்கதில் கொண்டுபோய் வெட்டி புதைக்கப்போவதாக  கூறியிருக்கிறான்  என்றதும் அந்த செல்வந்தன் விரைந்து சென்றார்.

திரும்பி வந்தவர் கையில் கடவுசீட்டு, விமான பயணசீட்டு, சிறிது பணம் எல்லாம் கொண்டுவந்து என்னை அழைத்து தன் மகிழுந்திலேயே விமான நிலையத்திற்கு அழைத்துவந்து அவர்தான் என்னை அனுப்பிவைத்தார் என்று சொல்லி அவருக்கே உரிய பாணியில் சிரிக்க துவங்கினார்!

சாமி சொன்னார் நானோ ஆண்டி எனக்கு ஏன் இந்த வெளிநாடு ஆசை என்று சொல்லி மறுபடியும் சிரித்தார்.  இவ்வாறு பல செய்திகளை சொல்லி , எங்களுக்கு யோகா வழியின் மேல்நிலைகலையும் கற்றுகொடுத்த அந்த தெய்வம் 'சேலம் ஐயன்'  இப்பொழுது நம்மிடையே இல்லை என்பது வருத்தமே.

அந்த விரிந்து பரந்த ஆதியுடன் சமம் ஆகி  சமாதி ஆகிவிட்டார்.  அந்த ஐயன் தெய்வமாக ஆனவர் நம்மை வாழ்தியருளுவாராக அய்யனே!

இனி தீர்த்தமலை சித்தர்கள் அருளிய நிகழ்வுகளை அடுத்த பதிவில் பகர்வோம் தங்கள் விருப்பத்துடன் ...

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௩) Othimalai Devine Secrets and its Devine Journey (13)

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௩)
Othimalai Devine Secrets and its Devine Journey (13)
ஓதிமலை ஐயனுக்கும் தில்லை கூத்தனுக்கும் ஒரே நாளில் திருக்குடமுழுக்கு (கும்பாபிசேகம்) நிகழவிருக்கும் இத்தருணத்தில் இப்பயணத்தை துவக்குகிறோம்.

வெளிநாட்டில் வாழ்ந்துவரும் ஒரு செல்வந்தர் சேலம் ஐயனை பற்றி நன்கு கேள்விப்பட்டு மகிழ்வுடன் பார்க்க வந்தார்.  சேலம் அய்யாவை  அந்த அன்பர்  தம்முடன் வெளிநாட்டில்  சில நாட்கள் தங்கும்படி வேண்டிகொண்டார், அதனை ஏற்காமல் மறுத்துவிட்டார்.  மேலும் ஐயனிடம் அங்கு பலர் மன அமைதியின்றி இருப்பதாகவும் தாங்கள் வருகை புரிந்தால் நல்லது என்று பலவாறாக கூறியதும் ஒப்புக்கொண்டார்.  இவரும் வெளிநாடு வந்த சேலம் ஐயனை நன்கு விருந்தோம்பல் புரிந்து சிறப்பாக பார்த்துகொண்டார் .    ஐயனுக்கு தனியாக ஓர் அறை ஒதுக்கி பலரும் வந்து பார்த்து தங்கள் குறைகளை கூறி அருள் பெற்று சென்றனர் .   சிலநாட்கள் சென்றதும் செல்வந்தர் அய்யாவிடம் அன்பாக ரசவாதம்(தங்கம் ) செய்யும்படி கூறினார் அதற்கு இது தருமத்திற்கு மாறான செயல் என்று கூறி மறுத்தார், இருந்தும் விட்டபாடில்லை அடிக்கடி வற்புறுத்தியும் சில நேரங்களில் மிரட்டவும் துவங்கினார் செல்வந்தர்.   இச்செயலுக்கு முழுமையாக மறுத்ததால் அவருடைய  அறையிலே  பூட்டி எவரும் பார்க்க முடியாமல் செய்துவிட்டார்.  ஒரு நாள் வந்து இன்று செய்யாவிட்டால் உன் உயிர் போய்விடும் என்று மிரட்டி சென்றார்.  நேரம் நகர்ந்தது மீண்டும் ஐந்து தடித்த அடியாட்களுடன் தடிகளுடன் வந்து ஐயனை சூழ்ந்து கொண்டு நின்றார்கள்.

சீனர்கள், சிங்களர்கள் போன்று இருந்தார்களாம் வந்த அடியாட்கள்.  செல்வந்தர்  மூன்று மணி நேரத்திற்குள்  உன்னை கட்டி இழுத்துக்கொண்டு சென்று 300 மைலுக்கு அப்பால் உள்ள மலைபகுதியில் துண்டு துண்டாக வெட்டி  புதைக்கப்போகிரார்கள் என்று கூறி சென்றுவிட்டார்.   அய்யனோ இறைவனை நினைந்து தியானத்தில் அமர்ந்தார்.  அசுரர்கள் கடுமையாக தவம் செய்து இறைவனை வரவழைத்து வரம் கேட்பார்கள்,  இறவாமல் இருக்க எப்படியெல்லாம் வேண்ட முடியுமோ அப்படியெல்லாம் கேட்டு ஏதாவதொன்றில் தவிறிவிடுவார்கள் அல்லவா அப்படியே செல்வந்தனும் ஓர் சிறிய தவறு செய்துவிட்டார்.     சுவாமி அறையிலிருந்த தொலைபேசி இணைப்பை துண்டிக்க மறந்துவிட்டார்.  வேறு மொழி தெரியாத அய்யன் அடையாள அட்டை முதலான ஆவணங்களையும் செல்வந்தனிடமே வைத்திருக்க ஐயன் முருகனிடம் உள்ளம் உருகி இப்படிதான் இந்த சீவனின் முடிவு என்று நீ விதித்து விட்டாய் போலிருகிறது என்று நினைத்தும் தொலைபேசி மணி ஒலித்தது ....

அடுத்து வரும் பயணத்தில் வேலாயுதனின் அருள் விளையாட்டை கவனிப்போம் ...தங்கள் அன்புடன்

வியாழன், 9 ஏப்ரல், 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰உ) Othimalai Devine Secrets and its Devine Journey (12)



ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰க )
Othimalai Devine Secrets and its Devine Journey (12)

ஓதிமலையில் தமிழ்ப் புத்தாண்டு திருவிழா சித்திரை முதல் நாள் வரும் "திருவள்ளுவராண்டு 01.01.2046" (14.04.2015) புதன்கிழமை நிகழும் இத்தருணத்தில் இப்பதிவு வெளியிடுவதில் மகிழ்ச்சி அய்யனே

ஐயன்  நாமமலைசித்தர் தான்   சக்திதாசர் என்று அழைக்கபடுவார். நம்மிடையே வாழ்ந்து சமீபத்தில் சமாதியெய்தினார்.  ஆதியுடன் சமமாக ஆவதுதான் சம ஆதி = சமாதி.  ஐயனின் குருநாதர் 30 ஆண்டுக்காலம் நவநஞ்சு (நவபாசாணம்) கூட்டு முயற்சி செய்து அந்தபணியை சக்திதசரிடம் விட்டு சமாதியானார்,  சீடர்    சக்திதாசர் தொடர்ந்து முயன்று வெற்றியும் பெற்றார்.  நவநஞ்சில் சிலைவடித்தும் சித்த மருந்துகள் மற்றும் சாறுமணியும் (ரசமணி) செய்து அருளினார்.  சிவத்திரு வாரியார் அவர்களுக்கு அளித்த  சாறுமணி இறுதிக்காலம் வரை அவரிடம் இருந்தது.  சிவசித்து விளையாட்டுகள் பல செய்தாலும் தான் செய்ததாக வெளியிடவில்லை. நவநஞ்சு செய்ய ஒருமரத்தின் பால் தேவப்பட்டது, அவரின் குருநாதர் கொல்லிமலை சென்று கொண்டுவா என்றாராம்.  அந்த மரத்தின் விவரம் கேட்டதற்கு விடியற்காலை எருமைமாடு கத்துவது கேட்டதும், புல்லை மடியில் கட்டிக்கொண்டு 'போ' என்றாராம்.  கொல்லிமலை காட்டில் சென்று தேடலானார்.  நாட்கள் பல கடந்தும் மரத்தை கண்டாரில்லை.  தன் குருவை நிணைந்து முயற்சி செய்தார்.  ஓர் நாள் சென்றதால் ஒரு பெரிய மரத்தின்மீது ஏறி அமர்ந்து கொண்டார்  காட்டு விலங்குகளுக்கு அஞ்சி அந்த அடர்ந்த காட்டில் .  விடியற்காலை மரத்தின் அடியில் பல எறுமை மாடுகளின் கத்தல் ஒலியை கேட்டு வியப்புடன் பார்த்தார்,   கீழே மாடுகள் ஏதும் இல்லை.  விடியற்காலை காற்று கிளம்பியவுடன்  அவர் அமர்ந்திருந்த மரம் ஒன்றோடு ஒன்று உராய்ந்து அதனால் எழுந்த ஒலி என்றறிந்தார்.  கீழிறங்கியவர் இந்த மரம்தான் என்று தெரிந்து அம்மரப்பாலை எடுக்க துவங்கினார்.  மடியில் புல் கட்டிகொண்டதால் பால் அதிகமாக சுரந்து வந்ததுகண்டு மேலும் வியந்துபோனார்.  இதுபோல் நட்டுவாக்கிளியின் நஞ்சு அதிகம் தேவைப்படுமாம், அதற்கு எங்குசெல்வது, நங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டே இருந்தோம்.  இதுபோல் பற்பல வியப்பளிக்கும் செய்திகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வார்.  எங்களில் ஒருவரை தூய்மையான குடிநீர் கொண்டுவர சொன்னார்.  அருகிலிருந்த ஒரு புல் போன்ற ஓர் செடி கொணர்ந்தார்,  அதை அந்த நீர் நிறைந்த தட்டில் போட்டு கலக்கினார்.  சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த பின் ஒரு கத்தி கொண்டுவர சொன்னார்,  தட்டில் இருந்த நீர் திடப்பொருளாக மாறியிருந்தது, அதை சிறு துண்டுகளாக நறுக்கி அணைவருக்கும் அளித்தார், அல்வா நன்றாகவே  இருந்தது.  பேசிக்கொண்டே மலையில் நடந்தோம் கீழே அருகில் ஓர்   பெரிய விவசாய  கிணறு   இருந்தது, அதில் 20 அடிக்கு கீழ் நீர் இருந்தது.  அங்குள்ள மக்கள் இக்கிணற்றிலிருந்தே நீர் எடுத்து செல்வார்கள்.  அருகிலேயே குளிப்பார்கள், இச்சூழல் மிக அழகாக இருக்கும் .  நான்கு சுவருக்குள் குளிக்கும் எங்களுக்கு ஒரு பெரிய சொத்து கிடைத்த மகிழ்ச்சி அடைந்தோம் .  எங்களுடன் பேசிகொண்டிருந்த ஐயன் ஒரு இளைஞரைப்போல் 20அடி மேல் உள்ள கிணற்றில் குதித்துவிட்டார்.  பிறகு பிணம்போல் நீரின்மேல் கிடந்தார்,  நங்கள் அணைவரும் குளித்து முடிந்ததும் அவருக்கே உள்ள பாணியில் சிரித்துகொண்டே ஏறிவந்தார்.  எங்களுக்கு எப்படி நீரில் மிதப்பது பற்றியும் கற்றுகொடுத்தார், சிவயோக பயிற்சிகளையும் கூடவே செய்து காட்டி அருளினார்.

நற்றமிழ் புலவர் நக்கீரர் பொற்றாமறை குளத்தினின்று உயிர் பெற்று எழுந்தார், பிறகு அந்த சொக்கநாதன், முக்கண்ணன் அகத்திய முனிவரை வருவித்து நக்கீரருக்கு யோக நிலை வந்தருளசெய்தார்  என்பது திருவிளையாடல் திருநிலை.  பிறகு காட்டில் தவக்கோலத்தில் ஒரு பூதம் நக்கீரபெருமானை மலையில் உள்ள ஒரு குகையில் அடைத்தது.   999 தவயோகிகளுடன் வேலையுதபெருமானை மனம் உருக  "திருமுருகாற்றுப்படை" பாடியதும் தன் வேலாயுதத்தால் மலையை பிளந்து அணைவரையும் விடுவித்தார் என்பது புராணம்.  இப்போது மிக அருகாமையில் இதுபோன்ற ஒரு நிகழ்வை பார்போம் ..

ஐயனின் அருளுடன் அன்பர்களின் கருத்திற்கிணங்க பயணம் தொடரும் .....
https://www.facebook.com/groups/othimalaikamukkam/permalink/552227354917057/