.jpg)
ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (ச)
Othimalai Devine Secrets and its Devine Journey (6)
பொங்கட்டும் பொங்கல்அய்யன் அருள் போல!
இப்பொழுதும் அருளாளர், நாயன்மார் போன்றவர்கள் இருகிறார்களா என்றால் ஆம் இன்றும் உள்ளார்கள். அவர்தம் பக்தியை அந்த ஈசன் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்றல் அது மிகையாகாது அய்யனே .
நான் பக்தன் என்று சொன்னால் அதை ஆண்டவன் அல்லவா ஆமோதிக்கவேண்டும்.
அம்மன்கோயிலில் உறையும் பத்திரகாளியாகிய 'ஆத்தா' மிகவும் தயைகூர்ந்த அருளுடன் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாக இருந்து அருள்பாலிக்கும் சிறப்பு அனைவரும் அறிந்ததே. நடு இரவில் ஆத்தா கோயிலிலிருந்து வெளியில்வந்து உலாவுவதுண்டு. சமீப காலம் வரை கோயிலின் எல்லைவரை வந்ததும் பாதசாரிகள் காலணிகளை கையில் எடுத்துக்கொண்டு எல்லை தாண்டியதும் காலில் அணிவது சமீப காலம்வரை பழக்கத்தில் இருந்ததாம்.
இப்பொழுது பூசை செய்யும் பூசாரி காளிதாசு ஆத்தாவின் அருளால் பிறந்தவர் அல்லவா? ஆத்தாவின் தனிப்பட்ட அன்புடனும், பாசத்துடனும் பூசை செய்துவருவது சிறப்பாகும். பத்திரகாளியாதலால் கோறைப்பற்கள் தாங்கிய சிலைவடிவமாக இருந்தாலும் அலங்காரம் செய்யும்பொழுது பூசாரி சிரித்த முகத்துடன்தான் ஆத்தாளை நமக்கு தெரியப்படுத்துவார். ஒருமுறை எங்களின் ஒருவரின் மகன் தொழில்படிப்பு தேர்வு எழுதுவதாக இருந்தான். தேர்வும் எழுதினான். ஆத்தாளிடம் அவன் தேர்வில் தெர்சியடைவனா இல்லையா என்று பூப்போட்டு பார்த்தோம். அதாவது ஓதிமலையில் உள்ள வழக்கம் போல் மலர்களை தலையுச்சியில் வைத்தோம். வலதுபக்கம் விழுந்தால் தேர்ச்சி என்றும் இடதுபக்கம் விழுந்தால் தேர்ச்சியில்லை என்பதும் முடிவு. அந்த மிகவும் கடினமான தேர்வில் தேர்ச்சியடைய அந்த பையனின் தந்தை ஆத்தாளை மிகவும் மன்றாடி வேண்டினார் .
ஆத்தாளின் அருள்நிலையை அடுத்து பார்ப்போம் ..
https://www.facebook.com/groups/othimalaikamukkam/

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக