வியாழன், 9 ஏப்ரல், 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰உ) Othimalai Devine Secrets and its Devine Journey (12)



ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰க )
Othimalai Devine Secrets and its Devine Journey (12)

ஓதிமலையில் தமிழ்ப் புத்தாண்டு திருவிழா சித்திரை முதல் நாள் வரும் "திருவள்ளுவராண்டு 01.01.2046" (14.04.2015) புதன்கிழமை நிகழும் இத்தருணத்தில் இப்பதிவு வெளியிடுவதில் மகிழ்ச்சி அய்யனே

ஐயன்  நாமமலைசித்தர் தான்   சக்திதாசர் என்று அழைக்கபடுவார். நம்மிடையே வாழ்ந்து சமீபத்தில் சமாதியெய்தினார்.  ஆதியுடன் சமமாக ஆவதுதான் சம ஆதி = சமாதி.  ஐயனின் குருநாதர் 30 ஆண்டுக்காலம் நவநஞ்சு (நவபாசாணம்) கூட்டு முயற்சி செய்து அந்தபணியை சக்திதசரிடம் விட்டு சமாதியானார்,  சீடர்    சக்திதாசர் தொடர்ந்து முயன்று வெற்றியும் பெற்றார்.  நவநஞ்சில் சிலைவடித்தும் சித்த மருந்துகள் மற்றும் சாறுமணியும் (ரசமணி) செய்து அருளினார்.  சிவத்திரு வாரியார் அவர்களுக்கு அளித்த  சாறுமணி இறுதிக்காலம் வரை அவரிடம் இருந்தது.  சிவசித்து விளையாட்டுகள் பல செய்தாலும் தான் செய்ததாக வெளியிடவில்லை. நவநஞ்சு செய்ய ஒருமரத்தின் பால் தேவப்பட்டது, அவரின் குருநாதர் கொல்லிமலை சென்று கொண்டுவா என்றாராம்.  அந்த மரத்தின் விவரம் கேட்டதற்கு விடியற்காலை எருமைமாடு கத்துவது கேட்டதும், புல்லை மடியில் கட்டிக்கொண்டு 'போ' என்றாராம்.  கொல்லிமலை காட்டில் சென்று தேடலானார்.  நாட்கள் பல கடந்தும் மரத்தை கண்டாரில்லை.  தன் குருவை நிணைந்து முயற்சி செய்தார்.  ஓர் நாள் சென்றதால் ஒரு பெரிய மரத்தின்மீது ஏறி அமர்ந்து கொண்டார்  காட்டு விலங்குகளுக்கு அஞ்சி அந்த அடர்ந்த காட்டில் .  விடியற்காலை மரத்தின் அடியில் பல எறுமை மாடுகளின் கத்தல் ஒலியை கேட்டு வியப்புடன் பார்த்தார்,   கீழே மாடுகள் ஏதும் இல்லை.  விடியற்காலை காற்று கிளம்பியவுடன்  அவர் அமர்ந்திருந்த மரம் ஒன்றோடு ஒன்று உராய்ந்து அதனால் எழுந்த ஒலி என்றறிந்தார்.  கீழிறங்கியவர் இந்த மரம்தான் என்று தெரிந்து அம்மரப்பாலை எடுக்க துவங்கினார்.  மடியில் புல் கட்டிகொண்டதால் பால் அதிகமாக சுரந்து வந்ததுகண்டு மேலும் வியந்துபோனார்.  இதுபோல் நட்டுவாக்கிளியின் நஞ்சு அதிகம் தேவைப்படுமாம், அதற்கு எங்குசெல்வது, நங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டே இருந்தோம்.  இதுபோல் பற்பல வியப்பளிக்கும் செய்திகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வார்.  எங்களில் ஒருவரை தூய்மையான குடிநீர் கொண்டுவர சொன்னார்.  அருகிலிருந்த ஒரு புல் போன்ற ஓர் செடி கொணர்ந்தார்,  அதை அந்த நீர் நிறைந்த தட்டில் போட்டு கலக்கினார்.  சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த பின் ஒரு கத்தி கொண்டுவர சொன்னார்,  தட்டில் இருந்த நீர் திடப்பொருளாக மாறியிருந்தது, அதை சிறு துண்டுகளாக நறுக்கி அணைவருக்கும் அளித்தார், அல்வா நன்றாகவே  இருந்தது.  பேசிக்கொண்டே மலையில் நடந்தோம் கீழே அருகில் ஓர்   பெரிய விவசாய  கிணறு   இருந்தது, அதில் 20 அடிக்கு கீழ் நீர் இருந்தது.  அங்குள்ள மக்கள் இக்கிணற்றிலிருந்தே நீர் எடுத்து செல்வார்கள்.  அருகிலேயே குளிப்பார்கள், இச்சூழல் மிக அழகாக இருக்கும் .  நான்கு சுவருக்குள் குளிக்கும் எங்களுக்கு ஒரு பெரிய சொத்து கிடைத்த மகிழ்ச்சி அடைந்தோம் .  எங்களுடன் பேசிகொண்டிருந்த ஐயன் ஒரு இளைஞரைப்போல் 20அடி மேல் உள்ள கிணற்றில் குதித்துவிட்டார்.  பிறகு பிணம்போல் நீரின்மேல் கிடந்தார்,  நங்கள் அணைவரும் குளித்து முடிந்ததும் அவருக்கே உள்ள பாணியில் சிரித்துகொண்டே ஏறிவந்தார்.  எங்களுக்கு எப்படி நீரில் மிதப்பது பற்றியும் கற்றுகொடுத்தார், சிவயோக பயிற்சிகளையும் கூடவே செய்து காட்டி அருளினார்.

நற்றமிழ் புலவர் நக்கீரர் பொற்றாமறை குளத்தினின்று உயிர் பெற்று எழுந்தார், பிறகு அந்த சொக்கநாதன், முக்கண்ணன் அகத்திய முனிவரை வருவித்து நக்கீரருக்கு யோக நிலை வந்தருளசெய்தார்  என்பது திருவிளையாடல் திருநிலை.  பிறகு காட்டில் தவக்கோலத்தில் ஒரு பூதம் நக்கீரபெருமானை மலையில் உள்ள ஒரு குகையில் அடைத்தது.   999 தவயோகிகளுடன் வேலையுதபெருமானை மனம் உருக  "திருமுருகாற்றுப்படை" பாடியதும் தன் வேலாயுதத்தால் மலையை பிளந்து அணைவரையும் விடுவித்தார் என்பது புராணம்.  இப்போது மிக அருகாமையில் இதுபோன்ற ஒரு நிகழ்வை பார்போம் ..

ஐயனின் அருளுடன் அன்பர்களின் கருத்திற்கிணங்க பயணம் தொடரும் .....
https://www.facebook.com/groups/othimalaikamukkam/permalink/552227354917057/