புதன், 13 மே, 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௪) Othimalai Devine Secrets and its Devine Journey (14)


ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௪)
Othimalai Devine Secrets and its Devine Journey (14)

தொலைபேசிக்கு அருகில் இருந்த சேலம் ஐயன் தொலைபேசியை எடுத்து பேசினார்.  ஐயனை சூழ்ந்துள்ள குண்டர்கள் கேட்க  "அய்யா" என்றார்.  மறு பக்கத்திலிருந்து ஒரு குரல் "ஐயனே எப்படி இருக்கிறீங்க", என்றது.  அய்யனோ யாரப்பா நீ என்றார்.  நான் தான் அய்யா வேலாயுதன், கடந்த வாரம் தங்களிடம் வந்து ஒரு குறையை தெரிவித்தேன்.  இப்பொழுது அது சரியாகிவிட்டது அய்யனே, நன்றி சொல்லவே அழைத்தேன் எப்படி இருக்குறீங்க அய்யனே என்றார் மீண்டும்.

அய்யன் சொன்னார் என்னை சுற்றி 5 அடியாட்கள் கையில் தடியுடன் சூழ்ந்து கொண்டு நிற்கிறார்கள், இன்னும் 3 மணியில் என் உயிர் போகப்போகிறது என்றார்.  மருமுனையிலுள்ள வேலாயுதம் என்ன அய்யா என்ன சொல்கிறீர்கள் விவரமாக சொல்லுங்க அய்யா என்றார்.  ஐயனும் அந்த செல்வந்தர் கூறி மிரட்டியதை அப்படியே சொன்னார் .    மூன்று மணியில் என்னை 300 மைலுக்கு அப்பால் உள்ள மலைபக்கதில் கொண்டுபோய் வெட்டி புதைக்கப்போவதாக அந்த செல்வந்தன் கூறியிருக்கிறான் என்றார்.  எதிர் முனையிலிருந்து  குரல் "அஞ்சாதீங்க அய்யனே"  அவர் வந்தவுடன் இன்னும் ஒருமணியில் தங்களுக்கு சொன்னது அந்த செல்வந்தனுக்கு நடக்கும் என்று சொல்லுங்கள் என்றார்.

சேலம் ஐயன் தொலைபேசியை வைத்ததும் சூழ்ந்திருந்த தடியர்களில் ஒருவன் தமிழன், என்ன அய்யா யார் தொலைபேசியில் என்றான், ..ஏதோ வேலையுதனாம் என்று விவரத்தை சொன்னவுடன்  "இன்னும் ஒருமணியில் அந்த செல்வந்தனுக்கு இதே நிலைமை நடக்கும் என்று சொன்னாம்ப்பா" என்றார்.  உடனே அந்த குண்டன் மற்றவர்களிடம் ஏதோ மொழியில் பேசினார்.  எல்லோரும் தடிகளை அங்கேயே விட்டுவிட்டு ஓடதுவங்கினார்கள்.   மடியில் உப்பரிகையில் இருந்த அந்த செல்வந்தர் அவர்கள் ஓட்டம்பிடிப்பதை பார்த்து கீழே இறங்கிவந்து அய்யனிடம் "ஏய் சாமி " என்ன மந்திரம் போட்டாய்,  அவர்கள் ஏன் இப்படி பயந்து ஓடுகிறார்கள்?. என்று மிரட்டி கேட்க ஐயனும் தொலைபேசியில் ஏதோ வேலாயுதம் என்பவன் பேசினார்.  இன்னும் ஒருமணியில்  300 மைலுக்கு அப்பால் உள்ள மலைபக்கதில் கொண்டுபோய் வெட்டி புதைக்கப்போவதாக  கூறியிருக்கிறான்  என்றதும் அந்த செல்வந்தன் விரைந்து சென்றார்.

திரும்பி வந்தவர் கையில் கடவுசீட்டு, விமான பயணசீட்டு, சிறிது பணம் எல்லாம் கொண்டுவந்து என்னை அழைத்து தன் மகிழுந்திலேயே விமான நிலையத்திற்கு அழைத்துவந்து அவர்தான் என்னை அனுப்பிவைத்தார் என்று சொல்லி அவருக்கே உரிய பாணியில் சிரிக்க துவங்கினார்!

சாமி சொன்னார் நானோ ஆண்டி எனக்கு ஏன் இந்த வெளிநாடு ஆசை என்று சொல்லி மறுபடியும் சிரித்தார்.  இவ்வாறு பல செய்திகளை சொல்லி , எங்களுக்கு யோகா வழியின் மேல்நிலைகலையும் கற்றுகொடுத்த அந்த தெய்வம் 'சேலம் ஐயன்'  இப்பொழுது நம்மிடையே இல்லை என்பது வருத்தமே.

அந்த விரிந்து பரந்த ஆதியுடன் சமம் ஆகி  சமாதி ஆகிவிட்டார்.  அந்த ஐயன் தெய்வமாக ஆனவர் நம்மை வாழ்தியருளுவாராக அய்யனே!

இனி தீர்த்தமலை சித்தர்கள் அருளிய நிகழ்வுகளை அடுத்த பதிவில் பகர்வோம் தங்கள் விருப்பத்துடன் ...

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௩) Othimalai Devine Secrets and its Devine Journey (13)

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௩)
Othimalai Devine Secrets and its Devine Journey (13)
ஓதிமலை ஐயனுக்கும் தில்லை கூத்தனுக்கும் ஒரே நாளில் திருக்குடமுழுக்கு (கும்பாபிசேகம்) நிகழவிருக்கும் இத்தருணத்தில் இப்பயணத்தை துவக்குகிறோம்.

வெளிநாட்டில் வாழ்ந்துவரும் ஒரு செல்வந்தர் சேலம் ஐயனை பற்றி நன்கு கேள்விப்பட்டு மகிழ்வுடன் பார்க்க வந்தார்.  சேலம் அய்யாவை  அந்த அன்பர்  தம்முடன் வெளிநாட்டில்  சில நாட்கள் தங்கும்படி வேண்டிகொண்டார், அதனை ஏற்காமல் மறுத்துவிட்டார்.  மேலும் ஐயனிடம் அங்கு பலர் மன அமைதியின்றி இருப்பதாகவும் தாங்கள் வருகை புரிந்தால் நல்லது என்று பலவாறாக கூறியதும் ஒப்புக்கொண்டார்.  இவரும் வெளிநாடு வந்த சேலம் ஐயனை நன்கு விருந்தோம்பல் புரிந்து சிறப்பாக பார்த்துகொண்டார் .    ஐயனுக்கு தனியாக ஓர் அறை ஒதுக்கி பலரும் வந்து பார்த்து தங்கள் குறைகளை கூறி அருள் பெற்று சென்றனர் .   சிலநாட்கள் சென்றதும் செல்வந்தர் அய்யாவிடம் அன்பாக ரசவாதம்(தங்கம் ) செய்யும்படி கூறினார் அதற்கு இது தருமத்திற்கு மாறான செயல் என்று கூறி மறுத்தார், இருந்தும் விட்டபாடில்லை அடிக்கடி வற்புறுத்தியும் சில நேரங்களில் மிரட்டவும் துவங்கினார் செல்வந்தர்.   இச்செயலுக்கு முழுமையாக மறுத்ததால் அவருடைய  அறையிலே  பூட்டி எவரும் பார்க்க முடியாமல் செய்துவிட்டார்.  ஒரு நாள் வந்து இன்று செய்யாவிட்டால் உன் உயிர் போய்விடும் என்று மிரட்டி சென்றார்.  நேரம் நகர்ந்தது மீண்டும் ஐந்து தடித்த அடியாட்களுடன் தடிகளுடன் வந்து ஐயனை சூழ்ந்து கொண்டு நின்றார்கள்.

சீனர்கள், சிங்களர்கள் போன்று இருந்தார்களாம் வந்த அடியாட்கள்.  செல்வந்தர்  மூன்று மணி நேரத்திற்குள்  உன்னை கட்டி இழுத்துக்கொண்டு சென்று 300 மைலுக்கு அப்பால் உள்ள மலைபகுதியில் துண்டு துண்டாக வெட்டி  புதைக்கப்போகிரார்கள் என்று கூறி சென்றுவிட்டார்.   அய்யனோ இறைவனை நினைந்து தியானத்தில் அமர்ந்தார்.  அசுரர்கள் கடுமையாக தவம் செய்து இறைவனை வரவழைத்து வரம் கேட்பார்கள்,  இறவாமல் இருக்க எப்படியெல்லாம் வேண்ட முடியுமோ அப்படியெல்லாம் கேட்டு ஏதாவதொன்றில் தவிறிவிடுவார்கள் அல்லவா அப்படியே செல்வந்தனும் ஓர் சிறிய தவறு செய்துவிட்டார்.     சுவாமி அறையிலிருந்த தொலைபேசி இணைப்பை துண்டிக்க மறந்துவிட்டார்.  வேறு மொழி தெரியாத அய்யன் அடையாள அட்டை முதலான ஆவணங்களையும் செல்வந்தனிடமே வைத்திருக்க ஐயன் முருகனிடம் உள்ளம் உருகி இப்படிதான் இந்த சீவனின் முடிவு என்று நீ விதித்து விட்டாய் போலிருகிறது என்று நினைத்தும் தொலைபேசி மணி ஒலித்தது ....

அடுத்து வரும் பயணத்தில் வேலாயுதனின் அருள் விளையாட்டை கவனிப்போம் ...தங்கள் அன்புடன்