புதன், 13 மே, 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௩) Othimalai Devine Secrets and its Devine Journey (13)

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௩)
Othimalai Devine Secrets and its Devine Journey (13)
ஓதிமலை ஐயனுக்கும் தில்லை கூத்தனுக்கும் ஒரே நாளில் திருக்குடமுழுக்கு (கும்பாபிசேகம்) நிகழவிருக்கும் இத்தருணத்தில் இப்பயணத்தை துவக்குகிறோம்.

வெளிநாட்டில் வாழ்ந்துவரும் ஒரு செல்வந்தர் சேலம் ஐயனை பற்றி நன்கு கேள்விப்பட்டு மகிழ்வுடன் பார்க்க வந்தார்.  சேலம் அய்யாவை  அந்த அன்பர்  தம்முடன் வெளிநாட்டில்  சில நாட்கள் தங்கும்படி வேண்டிகொண்டார், அதனை ஏற்காமல் மறுத்துவிட்டார்.  மேலும் ஐயனிடம் அங்கு பலர் மன அமைதியின்றி இருப்பதாகவும் தாங்கள் வருகை புரிந்தால் நல்லது என்று பலவாறாக கூறியதும் ஒப்புக்கொண்டார்.  இவரும் வெளிநாடு வந்த சேலம் ஐயனை நன்கு விருந்தோம்பல் புரிந்து சிறப்பாக பார்த்துகொண்டார் .    ஐயனுக்கு தனியாக ஓர் அறை ஒதுக்கி பலரும் வந்து பார்த்து தங்கள் குறைகளை கூறி அருள் பெற்று சென்றனர் .   சிலநாட்கள் சென்றதும் செல்வந்தர் அய்யாவிடம் அன்பாக ரசவாதம்(தங்கம் ) செய்யும்படி கூறினார் அதற்கு இது தருமத்திற்கு மாறான செயல் என்று கூறி மறுத்தார், இருந்தும் விட்டபாடில்லை அடிக்கடி வற்புறுத்தியும் சில நேரங்களில் மிரட்டவும் துவங்கினார் செல்வந்தர்.   இச்செயலுக்கு முழுமையாக மறுத்ததால் அவருடைய  அறையிலே  பூட்டி எவரும் பார்க்க முடியாமல் செய்துவிட்டார்.  ஒரு நாள் வந்து இன்று செய்யாவிட்டால் உன் உயிர் போய்விடும் என்று மிரட்டி சென்றார்.  நேரம் நகர்ந்தது மீண்டும் ஐந்து தடித்த அடியாட்களுடன் தடிகளுடன் வந்து ஐயனை சூழ்ந்து கொண்டு நின்றார்கள்.

சீனர்கள், சிங்களர்கள் போன்று இருந்தார்களாம் வந்த அடியாட்கள்.  செல்வந்தர்  மூன்று மணி நேரத்திற்குள்  உன்னை கட்டி இழுத்துக்கொண்டு சென்று 300 மைலுக்கு அப்பால் உள்ள மலைபகுதியில் துண்டு துண்டாக வெட்டி  புதைக்கப்போகிரார்கள் என்று கூறி சென்றுவிட்டார்.   அய்யனோ இறைவனை நினைந்து தியானத்தில் அமர்ந்தார்.  அசுரர்கள் கடுமையாக தவம் செய்து இறைவனை வரவழைத்து வரம் கேட்பார்கள்,  இறவாமல் இருக்க எப்படியெல்லாம் வேண்ட முடியுமோ அப்படியெல்லாம் கேட்டு ஏதாவதொன்றில் தவிறிவிடுவார்கள் அல்லவா அப்படியே செல்வந்தனும் ஓர் சிறிய தவறு செய்துவிட்டார்.     சுவாமி அறையிலிருந்த தொலைபேசி இணைப்பை துண்டிக்க மறந்துவிட்டார்.  வேறு மொழி தெரியாத அய்யன் அடையாள அட்டை முதலான ஆவணங்களையும் செல்வந்தனிடமே வைத்திருக்க ஐயன் முருகனிடம் உள்ளம் உருகி இப்படிதான் இந்த சீவனின் முடிவு என்று நீ விதித்து விட்டாய் போலிருகிறது என்று நினைத்தும் தொலைபேசி மணி ஒலித்தது ....

அடுத்து வரும் பயணத்தில் வேலாயுதனின் அருள் விளையாட்டை கவனிப்போம் ...தங்கள் அன்புடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக