திங்கள், 15 டிசம்பர், 2014

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (க)

(அருள்திரு மும்பை நாகராசு அய்யா ,  அருள்திரு சிவகுமார் அய்யாவுடன்  மலப்புழு ஓதியடிமை  மற்றும் நாம் அனைவரும் இணைந்து செல்லும் ஆன்மீக ஒதிமலை பயணம் )

ஒலிகளையே மையம்கொண்டு தோன்றி இயங்குகின்ற
உடலில் உட்பொருளை அல்லது உறுப்புகளை
சித்தத்துடன் இனணத்து தொட்டு ஓதி
வெற்றிகண்டவர்களே சித்த பெருமக்கள்ː

அந்த சித்த பெருமக்கள் நம்மிடம் மிகவும் அருள்கொண்டு (கருணை ) நமக்கு பாடல்கள் மூலமாகவும், குரு சீட
உரையாடல்கள் மூலமாகவும் , பல கருத்துக்களை
தெரிவித்து தெரியபடுத்தியுள்ளர்கள்.

அவற்றுள் சில, 'ஞானவெட்டியான்', 'அகத்தியர்  ஞானம்', முதலானவை .. முருகப்பெருமான்  அருள்ததும்ப முதல் மூத்த முனியான அகத்தியப்பெருமானுக்கு  அருளிய 'சுப்பிரமணிய ஞானம்', 'பெரிய ஞானக்கோவை' எனப்படும் சித்தர்கள் பாடல்கள், சிவானந்த பரமாம்சர் அருளிய 'சித்தவேதம் ' ஒளவையார் அருளிய   'ஒளவைக்குறள்'  போன்ற அறிவு நூல்களை கற்றுக்கொண்டும் கூடியமட்டும்  "கற்றபின் நிற்க அதற்கு தக " என்று திருவள்ளுவனார் மொழிந்ததற்கு ஏற்ப ஓரளவிற்கு முயன்று, வாழையடி வாழையென தோன்றிய திருக்கூட்டம் என்பதுபோல் ஆர்வமிகுதியாலும், பரம்பொருளின் வழிகாட்டுதலாலும் சித்த பெருமக்களின்  பாதையை பின்பற்றிவருகிறோம்.

சித்தர்கள் தங்கியருளிய மலைகளிலும் , குகைகளிலும் விரும்பி சென்று முறையான பயிற்சி செய்வோம்.
இமயமலைச் சாரலில் உள்ள இடங்கள் மற்றும்
தென்னகத்திற்கே உரிய சிறப்புகள் பல மிகுந்த கயிலைமலைக்கு இணையான பொதிகைமலை , தென்கயிலாயம் எனப்போற்றப்படும்  வெள்ளியங்கிரி  அடிமுடிகான இயலாத திருவண்ணாமலை  வாயுமைந்தன் அனுமன் சுமந்துசென்ற 'பர்வதமலை
சித்தர்கள் உலாவும் தீர்த்தமலை , சித்தமக்கள் மிகவும் சினங்கொண்டு பயிற்சி செய்த கொல்லிமலை போன்ற ஆன்மிக சிறப்பு மிகுந்த இடங்களில் தங்கிபயிற்சி செய்வது வழக்கம்.

இத்தெய்வீக சிறப்பருள் செறிந்த சித்த மகான்களின் திருத்தாள் பற்றி அவர்தம் அடிச்சுவட்டில் செல்லும் எங்களுக்கு அருளூட்டிய பரம்பொருள்  காட்டிய அருள்மலை  ஒதியங்கிரி எனப்படும் ஒதிமலை.  இவ்வோதிமலை மிக மிக அற்புதமானதும், அழகே உருவானதும், மலைகளில் தனித்துவம் வாய்ந்ததும், பற்பல கமுக்கங்களை (இரகசியங்களை) தன்னகத்தே ஒருங்கபெற்றதுமான சிறப்புவாய்ந்த மலை ஒதிமலையாகும்

ஒதிமலையின் சிறப்பையும் ,  ஒருசில கமுக்கங்களையும் (இரகசியங்களை) சென்றுவந்த அனுபூதிகளையும்  (அனுபவங்களையும்) மெய்யன்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் விருப்பமாயுள்ளோம் ..வரும் பகுதிகளில்

இவ்விடுகை பற்றிய மெயன்பர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்

                                ...ஒதிமலையின்  ஆன்மீக அருல்பயணம் தொடரும்..
https://plus.google.com/photos/118179755605870550832/albums/5367176929620166961?banner=pwa

https://plus.google.com/photos/118179755605870550832/albums/5367176929620166961?banner=pwa


4 கருத்துகள்:

  1. ஒதிமலையின் சிறப்பையும் , ஒருசில கமுக்கங்களையும் (இரகசியங்களை) சென்றுவந்த அனுபூதிகளையும் (அனுபவங்களையும்) மெய்யன்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் விருப்பமாயுள்ளோம்இவ்விடுகை பற்றிய மெயன்பர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்

    பதிலளிநீக்கு
  2. ஓதிமலை குமரேசனுக்கு ஏன் ஐந்து முகம் மற்றும் எட்டு கைகள் கால் மட்டும் இரண்டு இருக்கிறது ?

    பதிலளிநீக்கு
  3. ஓதிமலையில் காக்கை வருவதில்லை என்பது உண்மையே, இங்கு நவகிரக அதிகாரம் இல்லை என்று வேள்வி செய்யும்போது அகத்தியர் ஏடு கூறியுள்ளது மேலும் இங்கு ஓதியப்பன் அதிகார நிலையில் இருப்பதால் வேறு எந்த தெய்வ நிலைக்கும் இங்கு சிறப்பில்லை என்றும் கூறியது . சூரியன் நவகோள்களின் முதல்வனாக இருப்பதால் ஐயனை திருமுழுக்காட்டி மகிழ்ந்திருக்கலாம் என்றும் அய்யா நாகராசு அவர்கள் விளக்கம் சிறப்பாக உள்ளது அய்யனே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Nagarajan Krishnamurthy 17 டிசம்பர் 07:58 PM

      othimalail kakkai varuvadhu illai.....othimalaiil navagrahathukku adhikaram illai endru yaham seiyum bothu agasthiar nadi kuritru....melum ingu
      othiappan adihaara dhoranail irupadhuvum ingu veru endha deiivthukkum
      adhigaram illai enbadhuvm nammbikkai surian navagrathin mudalvar vazipaduvadaha irrukkalam ......nandri

      நீக்கு