செவ்வாய், 16 டிசம்பர், 2014

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (உ ) Othimalai Devine Secrets and its Devine Journey (2)

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (உ )
Othimalai Devine Secrets and its Devine Journey (2)

http://othimalaikamukkam.blogspot.in/2014/12/blog-post_16.html?showComment=1419223362612#c4920870070335640349

ஓதிமலை என்ற கடலுக்குள் முழுகுவதற்குமுன் சில தொடர்புள்ள நிகழ்வுகளை இன்றைக்கு ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குமுன் உண்மையில் நடைபெற்ற நிகழ்வு (சம்பவம்) இது ;

ஓர் அழகான, அமைதியான பசுமைபூத்து குலுங்கும் கிராமம் , அங்கு கைலசபதியாகி ஈசன் சிரவனபுரீச்சுரர் என்ற திருநாமத்துடன் கோயில்கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.   ஆம அந்த கிராமம்தான் இன்று கொங்குநாட்டில் கோயம்புத்தூர் அருகில் சரவணப்பட்டி என்று அழைக்கபடுகிறது .  இப்பொழுது நிகழ்வுக்கு வருவோம் .

அக்கிராமத்தில் ஒரு வீட்டின் திண்ணையில் ஒரு அம்மணி அமர்ந்துகொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து கண்களில் கண்ணீர் ததும்ப ஐயன் ஈசனை வேண்டிக்கொண்டிருந்தார்.

பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட
பாற்கடல் ஈந்த பிரான் அல்லவா ஐயன் ?

அடியார்களுக்காக பற்பல வேடம் தாங்கி அருளும் சிறந்த மிகப்பெரிய வேடதாரியல்லவா அவன்.
இப்போது ஜடா முடியுடனும் , உருத்திராட்ச மாலைகள் திருமேனியில் அணிந்தும் அழுக்குநிறைந்த ஆடையை அணிந்தும் சற்றே கருமை நிற உருவத்துடனும் அந்த பெண்மணியிடம் வந்தார்.  வந்தவர் "அம்மணி" என்று அழைத்தார் .  ஆம் இப்பொழுதும் கொங்குநாட்டில் 'தாய்மார்களை' அம்மணி என்றும் 'குழந்தைகளை'  தங்கம் என்றும் அழைப்பது வழக்கமாய் உள்ளது தங்கள் அறிந்ததே.

அம்மணி ஏன் அழுதுகொண்டிருக்கிறாய் என்றவுடன் யாரிடமும் தன் துயரத்தை வெளிப்படுத்த முடியாமல் தனக்குள் வைத்திருந்தது உடனே மடைதிறந்த வெள்ளம்போல் அப்படியே மனதில் இருந்ததை கொட்டி அழுதுவிட்டார் அந்த அம்மணி .

அப்படி என்ன அந்த அம்மணி சொன்னார் அடுத்த பதிவில் உணர்வோம் தங்கள் விரும்பி கேட்டால் அய்யனே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக