வெள்ளி, 26 டிசம்பர், 2014

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (ங) Othimalai Devine Secrets and its Devine Journey (3)

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) (ங)
Othimalai Devine Secrets and its Devine Journey (3)

அந்த அம்மணி சரவணப்பட்டியில் துறவியாய் திருவடமனிந்து அருள்வந்த ஈசனிடம் என்ன சொன்னார் என்பதும் இந்த நிகழ்வு (சம்பவம்) இன்றளவிலும் அந்தபகுதியில் உள்ளவர்கள் உணர்ந்த, தெரிந்த உண்மை.  தனக்கு குழந்தை பெற இயலாத காரணத்தால் தன் கணவரும், அவரின் குடும்பத்தினரும் தன் கணவருக்கு வேறு திருமணம் நிச்சயம் செய்ய திட்டமிட்டிருக்கும்  செய்தியே அந்த அம்மையாரின் துயரத்துக்கு காரணம்.  துறவியாக வந்தயெம்பெருமான் 'கவலையை விடு' என்று கூறி தனது மாடியிலிருந்து ஒரு பொடியை கொடுத்து உன் கவலை நீங்கும் என்று கூறி மறைந்தார் அந்த மறையவர்.

விதியின் வசதாலோ , சரவணப்பட்டி வாழ் மக்களின் நலனுக்காகவோ என்னவோ, அந்த அம்மணி துறவியின் கருமைபடிந்த அருவருப்பான உருவமும், அழுக்கான ஆடையிலிருந்த அளித்த அளித்த பொடியை உண்ண மனம் வரவில்லை.  அந்த பொடியை அருமருந்தை எதிரில் இருந்த மாட்டுத்தொழுவத்தில் ஓர் வாழையிலையில் போட்டுவிட்டார்.  அங்கிருந்த பசு பொடியுடன் இருந்த இலையை தின்றுவிட்டது.

என்னே! விதியின் விளையாட்டு; அந்தப்பசு ஒரு ஆண் மகவை ஈன்றது பிறப்பின் விந்தையன்றோ.  பிறந்த அக்குழந்தை சடைமுடியுடன் இருந்ததால் கிராமத்துமக்கள் "சடையப்பன் " என்று பெயரிட்டு அழைத்துவந்தனர்.

பற்பல சித்துவிளையாட்டுடன் வளர்ந்து "சடையப்பயோகீசர் "   என்ற திருநாமத்துடன் பல ஆண்டுகள் வாழ்ந்து தம்மிடம் வந்தவர்களுக்கு பற்பல நன்மைகளைச் செய்து அருகில் இருந்த "அம்மன்கோயில் " என்ற பகுதியில் 'சீவ முக்தி(சமாதிநிலை)' அடைந்தார் .  இப்பொழுதும் பல சித்து விளையாடி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.   அன்னாரின் தலைமுறையில் (வம்சத்தில்) வந்தவர்கள் அனைவரும் "கோ வம்சத்தினர்" என்று இன்றும் 2000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  "பண்டாரம் " என்ற பெயரில் பல கோயில்களில் பூசை செய்து கொண்டிருக்கிறார்கள்,  கோவையிலும் அதன் சுற்றுப்புறத்திலும்  துரவியாகவந்த ஈசுவரனை பற்றியும், அம்மன் கோயிலைப்பற்றியும்  அடுத்து வரும் பதிவில் பகர்வோம்..
https://www.facebook.com/groups/othimalaikamukkam/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக