செவ்வாய், 3 மார்ச், 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்)(௯) Othimalai Devine Secrets and its Devine Journey (9)

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்)(௯)
Othimalai Devine Secrets and its Devine Journey (9)
இறைவனின் கட்டளை ஆயிற்றே கொம்பை பிடித்ததுதான் தெரியும் அந்த இளைஞனுக்கு ..என்றால் அது மிகையில்லை ...உணர்வுவந்து பார்த்தபோது ஒரு கவுண்டரின் தோட்டத்தில் கால்கலை நீட்டிய நிலையில் உட்கார்ந்திருந்தான், அருகில் இலையில் 4 இட்லியும், சட்னி சாம்பார் சேர்த்து பரிமாரப்பட்டிருந்தது. கால் வலி ஏதுமில்லை "நான் எப்படி இங்கு வந்தேன்" என்ற கேள்வி எழுந்து விடையேதும் புரியாமல் குழம்பியபடி அதே நிணைவுடன் ஒவ்வொருவராக விசாரிக்க துவங்கினான், எல்லோரும் நீ எங்களுக்கு முன் மிக விரைவாக சென்றாய் என்று கூறியதும் மேலும் குழப்பமாகி விழி பிதுங்கிய நிலையில் வியந்துநிற்க அந்த பெரியவர் "காரிப்பட்டி அய்யா" விடம் தாங்கள் வந்து கோல் கொடுத்தீர்களே என்றபோதுதான் அனைவருக்கும் புரிந்தது "காரிப்பட்டி அய்யா" நிலையில் வந்தது அந்த பெரியவர் இல்லை; அந்த பெரியவராக அருளியது முருகவேள் ..அன்று ஔவையிடம் வந்தது போல் அருளினார் என்பது. "காரிப்பட்டி அய்யா" அன்றிலிருந்து பூரித்துபோகிறார் அவர் உருவில் வேலன் வந்தாரே என்று நினைந்து நினைந்து .
அந்த இளைஞன் யார் வேறு எவரும் இல்லை, அம்மன்கோயில் ஆத்தாவின் அருளால் பிறந்து கோவை சிரவனபுரீச்சுறரால் உயிர்வூட்டப்பெற்ற நமது 'காளிதாசு பூசாரி ' தான் என்றால் வியப்பாகவும் சிறப்பாகவும் இருக்கிறதல்லவா!

இறைவன் இன்றும் அன்றும் என்றும் எல்லா ஜீவ ஆன்மாக்களுக்கும் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் இரண்டுக்கும் அப்பாற்பட்ட நிலையிலிருந்தும் அருளூட்டி துணைபுரிகிறது என்பதை நாம் உணர்தல் வேண்டும்!.
ஓதிமலைக்கும் இத்தலங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் இதுபற்றி பகிர்ந்துகொள்வோம்
இனி இவ்வருள்பயணத்தில் அடுத்த கட்டம் சரணவப்பட்டி, கோவில்பாளையம் என்ற மிக அழகான கிராமம் அங்கு அருளாட்சிபுரிவது "காலகலேசுவரர்" என்ற திருநாமத்துடன் அந்த கயிலையம்பதி தொடரும் பதிவில் விரிவாக பார்போம் மற்றுமோர் அருள்பயணமாக ..
அடுத்து வடமதுரா, பொன்ஊத்துமலை என பயணம் தொடரும் தங்கள் விருப்பத்துடன் என்றால் வெறும் புகழ்ச்சியில்லை அய்யனே!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக