வியாழன், 19 மார்ச், 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௧ ) Othimalai Devine Secrets and its Devine Journey (11)





ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(௰௧ )
Othimalai Devine Secrets and its Devine Journey (11)

பொன்  ஊத்துமலை செல்லுமுன் ஒரு சிற்றூர் தென்பட்டது மிகவும் சுவையான செய்தியாகும்.   வடமதுரை என்றதும் கைலாச பதியின் பல திருவிளையாடல்கள் [மதுரையம்பதியில் நிகழ்ந்தது)  மனதில் இழைந்தோடியது, இங்கும் ஓர் பெரிய கோபுரம் இருக்கும் என்று தேடி கிடைக்கவில்லை. ஆனால் அந்த நீலகண்டனின் பழமையான ஆலயம் இருந்தது.  நாங்கள் சென்ற நாளோ அருள்நிறை முருகனுக்கு உகந்த கிருத்திகை.  செவ்வேள் கோயில் முகப்பிலேயே மயில்மீது முழுமையான அலங்காரங்களுடன் காட்சி அளித்தார்.  அங்கு  நீலகண்டனின் திருநாமம் விருத்தீசுரர்.  அய்யன் சுந்தரமூர்த்தியடிகள் அவிநாசியப்பரை  தரிசித்து வடமதுரை வழியாக வரும்போது மிகிவும் களைப்புற்று பசியாலும் தாகத்தாலும் வாடினார்.  மேலும் நடக்க முடியாமல் அருகிருந்த ஒரு முருங்கை மரத்தடியில்  களைப்பாக அமர்ந்தார்.

இப்போது அந்த உமாபதி 'வேடனாகவும்' அம்மை 'வேடுவச்சி' நிலையிலும் வந்து விசாரித்து அந்த முருங்கை மரத்தின் இல்லை, காய்களை பறித்து நல்ல விருந்து படைத்தார்கலாம். அம்மை புடவை தலைப்பால் வீசி அருளினார்களாம்.  காசியில் இறப்பவர்களை அப்பன் மடியில் வைத்து தாரக மந்திரம் கூற தாய் முந்தானையால் வீசுவார் என்பது காசி காண்டம் கூறுகிறது.

விருந்து படைத்த   'வேடனும்'  'வேடுவச்சி'யும் உமா மகேசுரராக விடைமேல் காட்சி கொடுத்ததனால் இங்கு விருத்தீசுரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார் என்பது திருவிளையாடல் திருநிலையாகும்.

இப்பொழுது பொன் ஊத்துமலை கோவையில் எங்கிருந்து  பார்த்தாலும் தெரியும் பெரியமலை, அம்மலையுச்சியில் ஒரு சிகரம் சிவலிங்கபாணம் போன்று காட்சிதரும்.  கீழ்பொன்  ஊத்துமலைஅடிவாரத்தின் மேல் ஏறினாள் மேல் பொன்  ஊத்துமலை புலப்படும்.   கீழ்பொன்ஊத்து அடர்ந்த கானகத்தில், பெரிய பெரிய கற் பாறைகளின் வழியாக அருமையான, தூய்மையான நீர் அருவியாக வரும்.  பெரிய நீர் வீழ்ச்சியாக இல்லை ஆனால் சிலர் நன்றாக நீராடலாம்.  மேல் மட்டத்தில் பெரிய பாறைகள் சமமாக இருக்கும், சிலர் படுத்துக்கொண்டே குளிப்பார்கள்.  ஒருசிலர் எண்ணை தேய்த்து அருகிருக்கும் சீயக்காய் மர இலையை பறித்து தேய்த்து குளிப்பார்கள்.  இந்த நீர் பாறைகளுக்கு இடையில் ஓர் அறை போன்ற அமைப்பு இருக்கும் அங்குள்ள அம்மையின் உருவச்சிலையை இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு வழிபடுதல் வேண்டும்,  அந்த அருவியின் ஒலிச் சிதரல்களில், அருவியின் அடியில் பாறைகளின் நடுவே இரண்டு குளக்கரைகளில் இரு முனிவர்கள் தவம் செய்துகொண்டிருந்தார்கள்.  உண்மையான துறவிகள்.  மக்கள் அதிகமாக வரத் துவங்கியதும் ஒருவர் தீர்தமலைக்கு சென்றுவிட்டார் மற்றொருவர் மேல் பொன் ஊத்துமலைக்கு சென்றுவிட்டார் .  மிகவும் சிறந்த தவயோகிகள் அவர்கள் .  மேல் பொன் ஊத்துமலை சென்றவர் பேசுவதில்லை, சற்றே சிரமப்பட்டு நீர் வரும் பாதையில்மேலே நடந்தால் அழகான ஓர் பறையின் பக்கத்தில்  இருக்கிறார்.  நாம் பச்சை பயிறு கொடுத்தால் எடுத்துக் கொள்வார்.  அவர் அருகில் அந்த சூழலில் அமர்ந்தால் திரும்பிவர மனமிருக்காது.

இந்த நக்கீர நாயனாரை பூதத்திடமிருந்து காத்த குமரன், நாமமலை சித்தரை காத்த உண்மை நிகழ்வை பார்போம்

...இவ்வருட் பயணம் தொடர அன்பர்களின் பதிவு மிகவும் தேவை ,,,

www.youtube.com/watch?v=QcldxnElDf8
http://theisticserendipity.blogspot.in/2011/05/kurudi-hills-and-ponnuthu.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக