வியாழன், 12 மார்ச், 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(ய ) Othimalai Devine Secrets and its Devine Journey (10)





ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்(ய )
Othimalai Devine Secrets and its Devine Journey (10)
வடமதுரை பொன்ஊற்று (பொன்ஊத்து மலை )
தேவர்கள் அமிர்தம் அருந்தி சாகாமல் நிலைத்திருக்க நினைத்தாலும் யுகமுடிவில் அழிகிறார்கள். ஆனாலும் கயிலாசபதி ஆலகால நஞ்சை விழுங்கினாலும் என்றும் நிலைத்திருந்து இப்புவியை மட்டுமல்லாமல் முழு அண்டங்களையும் காக்கின்றாயே அய்யனே இது உலகின் விந்தையிலும் விந்தையல்லவா என்று ஒரு அடியார் பாடுகிறார் . மற்றுமொரு அடியார் தன் ஒருபாகத்தை உமையாளுக்கு கொடுத்துவிட்டாய், மற்றொரு பாகத்தை சங்கரநாராயணன் என்று நாராயணனுக்கு கொடுத்துவிட்ட உமக்கு ஏது அய்யனே உடல் (சரீரம்) என்று அன்பொழுக வினவி தன் பக்தியியை வெளிப்படுத்கிறார். அன்னை உமாதேவியின் முகத்தை முழுநிலவாகவே பார்த்த அபிராமிபட்டருக்கு அம்மவாசை கூட முழுநிலவாகவே (பவுர்ணமியாக) பார்த்தாரல்லவா. இப்படி பல அன்பர்கள் பல நிலைகளில் ஒருவருக்கொருவர் நிகரில்லாமலும் பக்தி செலுத்தினாலும் நம் மனதில் இருப்பது வேடன் கண்ணப்பர் பக்தினிலையும், மார்க்கண்டேயரின் பக்தியும் மட்டுமே சிறந்துள்ளது அன்றோǃ இவர்களின் பக்தியை பாடாத அடியார்களே இல்லை எனலாம். தேவர்கள் கடத்தில்(குடத்தில்) இருந்து அமிர்தத்தை அருந்தி எஞ்சிய அமிர்தத்துடன் உள்ள கடத்தை(குடத்தை ) தேவர்கள் பூமியில் உள்ள ஒரு இடத்தில் புதைத்துவைதார்கலாம் பிறகு எடுத்துகொள்ளலாம் என்று நினைத்து. மறுபடி வந்து பயன்படுத்த எடுக்க நினைத்து குடத்தை புதைத்துவைத்த பூமியிலிருந்து மேலிழுக்க முடியாமல் எடுத்தபடியே அப்படியே நின்றுவிட்டது. இறைவன் அசரீரி வாக்கில் இனி இது பூமியில் உள்ளவர்களுக்கு பயன்படட்டும் என்று கூறினார். இதுவே இன்றும் நாம் காணும் "அமிர்தகடேச்சுரர்" . ஆகவே அந்த கடத்தை (குடத்தை) திருமுழுக்காட்டி (அபிசேகித்து ) வரும் நீரை அருந்தினால் அழியாநிலை அடையலாம் என்பது ஒரு நம்பிக்கை. இந்த மூர்தியின்மேல் காதலால் நாலும் பூசைசெய்து அந்த மூர்த்தியை தழுவி என்றும் பதினாறாக (16) சாகா நிலையடைந்தார் மார்க்கண்டேயர். மார்க்கண்டேயரை காத்து காலனை காலால் கடிந்தபிறகு காலன் கதை என்னவாயிற்று. உமையவளின் பாகத்தின் காலன்றோ அது எப்படி காலன் இறப்பான், அல்லது தண்டிக்கப்பட்டு தன் சக்தியை இழந்தான். அவள் தாயல்லவா இறைவனால் எரிக்கப்பட்ட காமனை தன் கடைக்கண் பார்வையால் இரதி தேவியின் கண்களுக்கு மட்டும் புலப்படும்படியாக காமனை உயிரெழ செய்தால் அன்றோ. பார்வதியின் மனக்கோளநாளில் தன் சக்தியை இழந்த காலன் பலதளங்களுக்கு சென்று ஈசனை வழிபடத் தொடங்கினார், எந்தெந்த தளங்களில் நாம் எமளிங்கனை காண்கின்றோமோ அங்கெல்லாம் எமன் வழபாடு செய்த திருதலங்கலாகும். இவ்வாறு பல இடங்களில் சென்று வழிபடும்போது ஓர் இடத்தில நதியோன்றும் அதன் கரையில் ஒரு முனிவரையும் பார்த்தான், அந்த இடம் அவனை மிகவும் ஈர்த்தது. அருகில் சென்றதும்தான் தெரிந்தது அந்த முனிவர் மூத்த தவயோகியான கவ்சிகர் (விசுவாமித்திரர்) என்று. அகமிகமகிழ்ந்து பேராவலுடன் தன் குறையை கூற அவரும் அருள்கூர்ந்து அந்த நதிக்கரையிலே இறைவனை அமைத்து பூசை செய்யும்படி கூறி அருளினார். அந்த இயமனும் உடனே நதிக்கரையிளிருந்து சிறிது நுரையுடன்கூடிய மணலை எடுத்து லிங்கமாக பிடித்துவைத்து வழிபட துவங்கினார், கை தண்டத்தால் ஓர் குழி ஏற்படுத்தி நீர் வருவித்து பக்தியுடன் பூசை செய்யலானார். கவுசிகமுனி தவம் செய்ததால் அந்த இடத்திற்கு கவுசிகபுரம் என்று சிறப்புடன் அழைக்கப்பட்டது. அதுதான் இப்பொழுது கோவையில் உள்ள 'கோவில்பாளையம் ' என்ற அழகுமிகு கிராமமாகும். கோவையில் இயமன் பூசையில் மகிழ்ந்த பசுபதி இயமனுக்கு சக்தியை கொடுத்தருளினார் என்பது வரலாறு. இத்தளத்தில் உள்ள இறைவன் கூட நுரையுடன்கூடிய மண்ணால் ஆனது என்பது இங்கு நோக்கத்தக்கது, இறைவன் காலகலேச்சுரர், நந்தியெம்பெருமான் மரகதத்தால் ஆனது, இங்குள்ள தட்சினாமூர்த்தி பெரிய அளவில் அமைந்து தலைமுடியில் இலிங்க வடிவம் அமைந்துள்ள காரணம் தெரியவில்லை. ஐயனின் கோயிலுக்கும் அம்மையின் கோயிலுக்கும் நடுவில் மிகவும் அழகுபொருந்திய வேலனின் கோயில் அமைந்துள்ளது . முருகனின் சன்னதி எதிரில் இயமன் என்ற திருநாமத்துடன் அருள்பாலிகின்றார். தன் தண்டத்தால் தோண்டிய கிணறு 'எமதீர்த்தம்' என்ற பெயரில் அமைந்துள்ளது. காலனுக்கு அருள்பாலித்த அய்யன் நமக்கும் அருள் பாலிப்பார் என்று கூறி ஓதிமலை பயணத்தை மேலும் தங்கள் எதிர்பார்ப்புடன் துவக்குவோம் பொன்ஊத்து மலைக்கும் நாம மலைக்கும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக