ஞாயிறு, 18 அக்டோபர், 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (உய) Othimalai Devine Secrets and its Devine Journey (20) கீற்று:2 "நிலையில்லா நிலை"

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (உய)
Othimalai Devine Secrets and its Devine Journey (20)
கீற்று:2 "நிலையில்லா நிலை"
அருளாளர் வள்ளலார் நாளான இன்று இப்பயணத்தை நன்றிகடனாக வெளியிடுவதில் மகிழ்வோமாக!
நாம் நாமாக அமைத்துக்கொண்ட பாதையை பார்த்தோம். இப்படி நன்மை தீமை நல்லது கெட்டது, இழப்பு ஈட்டம் என்று எல்லாவற்றையும் இயல்பாகவே எடுத்துகொண்டுவிட்டோம். ஒரு இளைஞன் காட்டுப்பாதையில் சென்று கொண்டிருக்கும்போது ஓர் புலி துரத்தியது. அஞ்சி ஓடி கிணறொன்றில் குதுதித்துவிட்டான். நல்ல வேலை கீழே விழாமல் இவருக்காகவே வளர்ந்திருந்த ஒரு செடியை பிடித்துகொண்டு தொங்கினான். கீழே ஆழமாக இருந்தது பாழும் கிணறு. கீழே கருநாகம் படமெடுத்து ஆடிக்கொண்டிருந்தது மேலே சினம் கொண்ட புலி மேலே எப்போது வருவான் என்று எட்டிப்பார்துக்கொண்டிருந்தது. கர கர என்ற ஒலியை கேட்டு பிடித்துக்கொண்டிருந்த செடியை பார்த்தால் அதன் வேரை ஒரு எலி கடித்துகொண்டிருந்தது. எந்த நேரத்திலும் அந்த செடி விழும் நிலையில் இருந்தது. இவற்றுக்கெல்லாம் மேல் கிணறருகேஇருந்த ஒரு மரத்தின் கிளை கிணற்றின் மேல் தெரிந்தது அந்த கிளையில் ஒரு தேன்கூடு இருக்க அதிலிருந்து அன்பொழுக கசிந்துவந்த தேன் கிணற்றில் பாதுகாப்பாக தொங்கிக்கொண்டிருந்த இளைஞன் மீது விழுந்தது. அந்த இளைஞனும் மிகவும் சுவைத்து அருந்திகொண்டிருந்தான்.
நிலையில்லாத ஒரு நிலையில் வாழ்க்கையை அவனைப்போல் நாம் ஏதோ ஒரு இனிமைகருதி பலவிதமான துயரங்களை ஏற்றுக்கொண்டு வாழ்வதை விட்டுவிட்டு உண்மையான மற்றும் நிலையான மகிழ்வினை அடையும் வழியை ஆராய்ந்து செயல்படுவோம்.
ஆறாம் அறிவை ஆண்டவன் அதற்காகவே நமக்கு கொடுத்தவரமாகும். இனம் இனத்துடன் சேரும் என்பது நமக்கு புரியும். நீருடன் நீர் சேரும், காற்றுடன் காற்று சேரும், ஒளியுடன் ஒளி சேரும், நெருப்புடன் நெருப்பு சேரலாம். இந்த சீவ ஆன்(த்)மாவாகிய நாம் அந்த பரமாத்மாவுடன் சேரவேண்டும் அல்லவா? அந்த பரம்பொருள் எப்படிப்பட்டது அன்பு மயமானது அன்பே சிவம். அன்பே சிவம். அந்த அன்பே சிவம் என்றால் நாம் நம்மை எப்படி தயார் செய்து கொள்ளவேண்டும், நாமும் அன்பு மயமாக ஆகவேண்டும் அல்லது மாறவேண்டும் அல்லவா. பெரும்பாலும் நாம் இப்பொழுதும் பிறந்தவுடன் விலங்களைப்போல் நான்கு கால்களால் தான் நடக்கிறோம், தவழ்கிறோம். பிறகு படிப்படியாக இரண்டு கால்களால் நடக்க துவங்குகிறோம். இதைப்போலவே விலங்குகலிலிருந்து மனிதனாக மாறும் நிலையில் விலங்கின் குண நிலைகள் மிகவும் அதிகமாகவே பொருந்தி இருந்ததால் நாம் கற்கால மனிதர்களாகவே இருந்தோம். பிறகு படிப்படியாக அதாவது ஒவ்வொருபிறவியாக பற்பல பிறவிகள் பயணித்து இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறோம் என்று அவரவர்களுக்கு மிகவும் சிறப்பாகவே தெரியும். விலங்கின் எண்ணங்களும், பழக்க வழக்கங்களும் அவ்வப்பொழுது தலைகாட்டாமல் நாம் பழகியே ஆக வேண்டும்.
ஒருமுறை துறவி "தோபா சுவாமிகள்" திருவொற்றியூரில் ஓர் வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டிருப்பது வழக்கம். அப்போது சாலையில் செல்பவர்கள் ஒவ்வொருவரையும் ..மாடு போகிறது, ஆடு போகிறது, யாணை போகிறது, ஒட்டகம் போகிறது என்று விலங்குகளின் பெயரை சொல்லுவார். வள்ளல் இராமலிங்க அடிகள் சென்றபோது மனிதன் போகிறார் என்றார் என்பது ஒரு சிறப்பான நிகழ்வாகும் அன்றோ! அருளாளர் தொபாசுவாமிகள் வரலாரில்!.
நாம் முழு மனிதனாக உருவாக மேலும் பயிலுவோம் ... பயணம் தொடரும் ..
Santhi Anbe SivamNerkunam Radhakrishnan Venkatesan மற்றும்வேறு 2 பேர்கள் ஆகியோரின் விருப்புக்குரியது.
கருத்துக்கள்
Santhi Anbe Sivam Adputhamane karuthu.hunggal payanam thodaradthum.om sivaye namahe.
Nagarajan Krishnamurthy மிக்க நன்றி சிவா,
தங்கள் கறுத்து மிகவும் ஊக்கமாக உள்ளது....
நன்றி...............அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக