ஞாயிறு, 18 அக்டோபர், 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (௰௯ ) Othimalai Devine Secrets and its Devine Journey (19) கீற்று:2 "பாதை"

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (௰௯ )
Othimalai Devine Secrets and its Devine Journey (19)
கீற்று:2 "பாதை"
மெய்யன்பர்களே, இப்பொழுதெல்லாம் இணையத்தில் வராத செய்திகளோ, பாடல்களோ இல்லை எனலாம். நமக்கு எவை எவையெல்லாம் வேண்டுமோ அவை அனைத்தும் நொடியில் கிடைத்துவிடுகிறது, அது உண்மையோ பொய்யோ என்பது வேறு !. அறிய பெரிய கருத்துக்கள், சித்த பெருமக்களின் நூல்கள், தேவார, திருவாசக அன்பொழுகும் அருள்நிறைந்த பாடல்களாக மந்திரங்களாக அனைத்தும் கிடைகிறது. இவை அனைத்தும் தனி மனிதர்களின் சிந்தனைகளைவிட, வேறுஒரு புத்தகத்திலிருந்தோ அல்லது பதிவுகளிலிருந்தோ எடுத்து கொடுக்கப்படுகிறது. அப்போதெல்லாம் ஒரு கருத்தையோ, காவியத்தையோ வெளி கொண்டுவர வேண்டுமானால் மிகவும் கடினம். கவியரசர் கம்பநாட்டாழ்வார், தமது இராமாயணத்தை வெளிக்கொணர மிகவும் வருத்தப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியும். இத்தனைக்கும் கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்ற பெருமையுள்ள அவருக்கே அந்த நிலை.
தமிழ் தெய்வம் அடியெடுத்து கொடுத்து எழுதிய கந்தபுராணம் வெளிக்கொணர இறைவனே புலவராக வந்து அருள வேண்டியிருந்தது. பழைய காலங்களில் அரிய நூல்கள் கிடைப்பதரிது. இப்பொழுது அரிய நூல்களும் சிறந்த கருத்துக்களும் எளிதாக கிடைக்கிறது. நாம் பல நூல்களையும் கருத்துகளையும் "பொழுது போக்காக" பயன்படுத்தி கொள்கிறோம்.
உண்மையாக பார்த்தால், மிகவும் தேவையான ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்தப் பாடல்கள் அனைத்தும் பொழுது போக்கிற்காகவும், பொழுது போக்கிற்காகவே உள்ள நூல்கள் அவசியமாகவும் ஆக்கிக்கொண்டு விட்டோம் அதாவது அற்பமானதை அதிசயமாகவும். அதிசயமானதை, சிறப்புவாய்ந்ததை அற்பமாகவும் ஏற்றுக்கொண்டதை போல. நாம் ஏன் இதை பேசுகிறோம் என்றால் இத்தகைய சிறந்த கருத்துக்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல் கிடைத்தும் நமக்கு அமைதியும், மகிழ்ச்சியும் இல்லாத நிலைக்கு காரணம் "கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக" என்று வள்ளுவப் பெருந்தகை கூறியது படித்த படிப்போடு காணாமல் போய்விட்டது. மகிழ்ச்சி மற்றும் அமைதி என்பது அய்யன் வாரியார் அருளியது போல் கடையில் கிடைப்பது அல்ல. குளிர் நீங்க வேண்டுமாயின் வெப்பம் வேண்டும், இருள் வேண்டுமானால் வெளிச்சம் (ஒளி) வேண்டும். துன்பம் நீங்க இறைவனின் அருள் வேண்டும். "இன்பமே என்னாலும் துன்பமில்லை" என்று அப்பர் பெருமான் கூறியிருப்பார். சற்று இப்பொழுது பயணத்திற்கு வருவோம்.
நமக்கு ஆறு அறிவு அதாவது மனிதர்களுக்கு ஆறறிவு என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் உண்மையிலேயே, அந்த ஆறாம் அறிவை வைத்து ஓர் அறிவு உயிர் முதல் ஐந்து அறிவு உயிர் ஈறாக உள்ள கோடிக்கணக்கான உயிர்கள் செய்யாதது எதை நம் சாதித்துள்ளோம், சற்றே சிந்திக்க வேண்டும் அல்லவா !
இங்கு யாரையும் குறைவாகவும் இழிவு படுத்தும் நோக்கத்துடனும் எழுதவில்லை. அருள்கூர்ந்து புரிந்துகொள்ளவும், அனைத்து உயிர்களும் தனக்கென குடில் அல்லது வீடு அமைத்துக்கொண்டு தம் இனத்தை பெருக்கிக்கொண்டு வாழ்கின்றன. பார்க்கப்போனால் நம்மைவிட அழகான வீடுகள் கட்டிக்கொள்கின்றன. பஞ்சுமெத்தை கூடிய படுக்கை அறை தம் குஞ்சுகளுக்கு, தமெக்கென மாடியறை, காற்றிலும், மழையிலும் காப்பாற்றிகொள்ளும் வகையில் தமக்கு தாமே பிறர் உதவியின்றி அமைத்துகொள்வது சிறப்பன்றோ. குறிப்பாக தூக்கணாங் குருவியின் கூட்டைப்பாருங்கள். பல உயிரிகள் நீர் இருக்கும் இடங்களுக்கு முன் கூட்டியே இடம்மாறி சென்றுவிடுகிறது, இயற்கை சீற்றங்களின் ஏற்றத்தாழ்வுகளை முன்கூட்டியே உணர்ந்து பாதுகாப்பாக செயல்புரிவது இங்கு நோக்கத்தக்கது. திருடர்களை பிடிக்க நாய்களின் (மோப்பதிற்கு) உதவி தேவைப்படுகிறது. நாம் கற்கால மனிதர்களைப்போல் இல்லாமல், ஓரளவு பகுத்துப்பார்த்து வாழ்கின்றோம். அவ்வளவுதான்.
நமது முன்னோர்கள் சாதிக்காதது எதை நாம் சாதித்துவிட்டோம். நாம் நமக்கென்று ஒரு பாதையை வகுத்துக்கொண்டு வாழ்கிறோம். குழந்தைப்பருவத்தில் விளையாடி பிறகு முடிந்தவரை படித்து அல்லது பட்டம் பெற்று பொருளீட்டி, திருமணம் கொண்டு குழந்தைகளைப்பெற்று பிறகு அவர்களை எதிர்பார்த்தோ அல்லது சேர்த்துவைத்த சொத்துக்களை கொண்டோ முதுமைக் காலத்தில் அவரவர் விருப்பபடி இந்த உடல் தன் பயணத்தை முடித்துக்கொள்கிறது.
இதில் எந்த ஒரு மாறுபாட்டையும் நாமும், நம்மை சார்ந்த இனக்கூட்டங்களும் ஏற்றுக்கொள்வதில்லை. ஏற்க விரும்புவதும் இல்லை. கட்டுப்பாடுகள் முன்னேற்றத்திற்கு மிகவும் தேவை, ஆனால் அதுவே இரும்பு விலங்காக மாறிவிடக்கூடாது. குறிப்பாக நம் குழந்தை மற்ற குழந்தைகளைப்போல் விளையாடவோ அல்லது பிற செயல்பாடுகளில் சிறப்பாக இல்லையென்றால் உடனே வைத்தியரிடமோ, கோள்களை ஆராய்பவரிடமோ சென்று வருந்துகிறோம், இயல்பான நிலைக்கு வரும் வரை பாடுபடுகிறோம். பள்ளி துவங்கி கல்லூரி வரை வரும் ஏற்றத்தாழ்வு நிலைகள் ஈடு கொடுத்து வாழ்க்கை பயணத்தில் திறம்பட பயணிக்க உதவுகிறோம். இதற்காக நாம் படும் பாடுகள் எழத முடியாதவை.
இதன் பிறகு பணி நிலை, அதைதொடர்ந்து ஓரளவு பொருளீட்ட துவங்கியவுடன் திருமணம். திருமணம் நாம் வேண்டியோ வேண்டாமலோ, பெரு முயற்சி நிகழ்ந்து திருமணம் நிகழ்ந்துவிடுகிறது. பிறகு அவ்வளவுதான் கிரகணம் பிடித்து விட்டாலும் வாழ்க்கை கிரகணம் விடாது பற்றிகொள்ளும்! அளவுக்கு மாறிவிடுகிறது வாழ்க்கை. ஒரு சுவையான செய்தி நாம் அறிந்ததே ..பத்தினது அடிகளார் திருமணம் நடக்கும் ஒரு வீட்டில் வாயிற் பந்தலில் அமர்ந்திருந்தார் மண மகன் மண மேடை வந்ததும் அவனருகில் நின்றுகொண்டு காதருகில் "இப்பவும் தப்பிக்கலாம் " என்று கூறினார்.. .....பயணம் தொடரும்
Nerkunam Radhakrishnan VenkatesanNagarajan Krishnamurthy,Vetri Vel உடன் உங்களதும் விருப்புக்குரியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக