ஞாயிறு, 18 அக்டோபர், 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (௰அ ) Othimalai Devine Secrets and its Devine Journey (18) கீற்று:1 "நம்மால் முடியும்"

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (௰அ )
Othimalai Devine Secrets and its Devine Journey (18)
கீற்று:1 "நம்மால் முடியும்"
மெய்யன்பர்களே, தீர்த்தமலையுடன் முதல் பகுதி (காண்டம்) முடிவடைந்து ஓதிமலை பயணம் துவங்கவுள்ளோம். இந்த இரண்டாம் பகுதியில் (காண்டத்தில்), நம் உண்மை நிலையையும், எதை உணர்ந்தால், நமக்கு முழுமை (பூரணத்துவம்) உண்டாகுமோ, எதை அடைந்தால், அதற்குமேல் ஒன்றை அடைய விருப்பம் இருக்காதோ,
எதை தெரிந்துகொண்டால், வேறு எதையும் தெரிந்து கொள்ள விருப்பம் இருக்காதோ ,
எந்த நிலை வந்தால், அதற்கு மேல் ஒன்றும் செய்யவேண்டிய எண்ணம் வராதோ,
அந்த நிலைக்குவர, அதை தெரிந்துகொள்ள, அதை உணர, அதை அடைய இவ்வருட்பயனத்தில் தொடர்வோம்.
இயல்பாக நமக்கு ஏற்படும் கேள்விகள் குடும்பத்துடன் இருக்கும் நம்மாள் முடியுமா?
மனைவி மக்களுடன் வாழும் நாம் எப்படி இந்த முயற்சியில் இறங்குவது?
துறவியாகி காடு மலைகளுக்கு செல்லவேண்டுமா?
யாரோ ஒரு குருவை தேடிப் போகவேண்டுமோ?
என்னென்ன பயிற்சிகள் செய்யவேண்டும் எப்படி செய்வது என்றெல்லாம் மனதில் எழும் !
நம்மால் முடியும், காடு மலைகளுக்கு துறவியாகி செல்லத்தேவையில்லை நல்ல உண்மை குரு தானே கிடைப்பார் என்றும், பயிற்சிகளை பற்றியும் தெளிவாக, படிப்படியாக பாப்போம்.
முனிவர்களும், சித்த பெருமக்களும் நம்மை போன்று மனைவி மக்களுடன் வாழ்ந்து கொண்டே, ஆராய்ந்து, கடுமையாக முயன்று அந்த பேரின்பத்தை தாமும் நுகர்ந்து, நமக்கும் வழிகாட்ட வில்லையா? மூத்தமுனி அகத்தியர் பெருமான் லோபா முத்திரை தேவியுடனும், ஐயன் காகபுசுண்டர் பகுளா அம்மையுடனும், ஐயன் அத்திரி மகான் அனுசுயா தேவியுடனும், ஐயன் வசிட்டர் போன்ற பல அருளாளர்கள் குடும்பத்துடன் இருந்து பயின்றவர்கள்.
மேலும் நாயன்மார்கள் அனைவரும் அப்படித்தானே! பிறகு நாம் மட்டும் ஏன் இந்த குடும்பத்தை நரகமாக கருதி அமைதியில்லாமல் வாழ வேண்டும்.
நம்மால் முடியும் என்ற முழு நம்பிக்கையுடன் ஓதிமலை பயணத்தை தொடர்வோம் தங்கள் ஒத்துழைப்புடன் அய்யனே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக