ஞாயிறு, 18 அக்டோபர், 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (௰௭ ) Othimalai Devine Secrets and its Devine Journey (17)

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (௰௭ )
Othimalai Devine Secrets and its Devine Journey (17)
தீர்த்தமலை மிகவும் அற்புதமான மலை, மலையின் ஒருபகுதி எப்பொழுதும் பசுமையாகவே உள்ளது. இத்தளம் 12 சோதிலிங்கங்கலுக்கு இணையான இரமேசுரதிற்கு ஒப்பான ஒன்றாகும். அங்கு செல்லமுடியாதவர்கள் தீர்த்தமலை ஈசனை தரிசித்து அருள்பெறலாம். மலை மீது ஒரு கோயிலும் மலையின் கீழ் ஒரு கோயிலும் உள்ளது. நன்பகல் பூசை மலை மீது உள்ள கோயிலிலும், மலையில் அடிவாரத்தில் உள்ள கோயிலில் மாலை நேரத்திலும் நடைபெறுகிறது. இராமபிரான் இத்தளத்தில் சிவபெருமானை வழிபடும்போது கங்கை நீர் கொண்டுவர அனுமன் தாமதித்ததால் மலைமீது ஓர் அம்பு எய்தி நீர் வரவைத்து பூசை செய்து முடித்ததாக வரலாறு. இதுவே இராமதீர்தம் என்று அழைக்கப்படுகிறது.இது நடு மலையில் 20 அடி தொலைவிலிருந்து எப்பொழுதும் வந்துகொண்டிருக்கிறது. அருகருகே மூன்று இடங்களிலிருந்து நீர் வந்துகொண்டிருக்கிறது, இது அகத்தியர் தீர்த்தம், சீதா தீர்த்தம், குமார தீர்த்தம் என்றும் அழைக்கபடுகிறது. காலம் தாழ்ந்து வந்த அனுமன் பூசை முடிந்து விட்டதால் கொண்டுவந்த நீரை கோபத்துடன் தூக்கி வீசினார் அதுவே 10 கி .மீ. தொலைவில் அனுமன் தீர்த்தமாக விளங்குகிறது. தீர்த்தமலை கோயிலில் எப்பொழுதும் நீர் வந்துகொண்டிருக்கிறது ஆனால் அடிவாரத்தில் இல்லை. இராமேசுவரத்தை போல கோயில் எப்போதும் திறந்திருக்கும் கருவறையை தவிர்த்து. பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் திறந்தவெளியில் படுக்கின்றார்கள், தங்கள் குறைகளுடன் இரவு தங்கினால் குறைகள் தீர்க்கப்படுகிறது என்ற நம்பிக்கையில். முதல்முறையாக நாங்கள் சென்ற போது இரவு பத்து மணி ஆகிவிட்டது. பக்தர்கள் இரவிலும் குளித்துக்கொண்டே இருந்தார்கள், காலையில் கோயிலுக்கு மேல் உள்ள குகையில் ஒரு சாமியார் இருப்பதை அறிந்து அவரை பார்க்கச் சென்றோம். அப்பொழுது கோவணம் கட்டிக்கொண்டு அருகில் ஒரு பாம்புடன் படுத்திருந்தார். எங்களுக்கு சற்று அச்சமாக இருந்தது. அவர் எங்களை பார்த்து எழந்தவுடன் அங்கு பாம்பு காணப்படவில்லை மறைந்துவிட்டது . அவர் படுத்திருந்த இடம் ஒருவர் மட்டுமே படுக்கும் அலுவுக்கே இருந்தது, மழைநீர் மலையிலிருந்து வேகமாக வரும்போது பரன்போன்ற அமைப்பில் இருந்துகொல்வாராம். அங்கு அமைந்துள்ள விசாலாட்சி அம்மையில் கோயிலை பராமரித்துவரும் அம்மையார் ஒருவர் எங்களுக்கு இனிய அமுது செய்து பசியாற்றினார். அந்த அம்மையில் விருந்துணர்வில் களித்த நாங்கள் எங்களுடன் ஒதிமலைக்கு அழைத்துச்சென்று அய்யன் ஓதியப்பனை தரிசிக்க செய்தோம்(நன்றியாக) .
தீர்த்தமலை மேல் செல்ல அந்த அம்மையாரிடம் விவரம் கேட்டதற்கு அந்த சாமியாரின் இசைவு முக்கியம் என்றும் விடியற்காலையிலேயே புறப்படவேண்டும் என்றும் கூறிவிட்டார், சாமியாரிடம் மெதுவாக மேலே செல்ல அனுமதி கேட்டோம், அன்று செல்ல முடியாது என்றும் மேலும் விவிரம் கேட்டதற்கு அங்கு பாம்பாட்டி சித்தரின் குகை உள்ளது என்றும் உள்ளே செல்ல வாயிலில் ஒவ்வொருவரும் படுத்தவாறே செல்லமுடியும் என்றும் உள்ளே சென்றால் 5 அல்லது 6 பேர் அமர்ந்து தியானம் செய்து சித்தரை உணரமுடியும் என்றார். சித்தர் உள்ளே இருந்தால் மலை வண்டுகளும், மலை தேனீக்களும் குகை வாயிலை மூடிக்கொள்ளுமாம்.
அவர் கூறியதிலிருந்து மலைக்கு மேல் நிறைய சித்தர்கள் இருப்பதாக தெரிந்தது. அந்த இடம் எப்போதும் மிகவும் பசுமையாக இருக்குமாம், ஒருவர்பின் ஒருவராக உட்கார்ந்துதான் அவரிடம் பேசமுடிந்தது. வரும்போது ஒவ்வொருவர் தலையிலும் கைவைத்து ஒரு 'கதி' எடுத்து அருளூட்டி அனுப்பினார். திருவண்ணாமலைக்கு மிக அருகாமையில் இருப்பதால் அன்பர்கள் தீர்த்தமலை சென்று ஈசனின் அருளும் சித்தர்களின் ஆசியும் பெறலாம்.
இதுவரை ஓதிமலை பயணம் படித்துவந்த அன்பர்களுக்கு நன்றிகலந்த வணக்கங்கள். உண்மை நிகழ்வுகளை கதைவழி உணர்ந்த நிலை மாற, ஊனும் உயிராய் இருந்து ஓசையுடன் வாழுவு தரும் ஐயனை, உள்ளும் புறமும் நீக்கமுற அகண்டு பரவிய ஆனந்த சோதியை அவன் அருளால் உணர முயல்வோம். அவன் அருளால் ...இசைவு உள்ளவர்களுடன் ஓதிமலை பயணம் தொடரும் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக